

திருநெல்வேலி: திருநெல்வேலி பணகுடி பேரூராட்சியில் பாஜக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் சமமான வாக்கு பெற்றதால் குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், திருநெல்வேலி பணகுடி பேரூராட்சியில் 4-வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட மனுவேலுவும், அதிமுக வேட்பாளரும் தலா 266 வாக்குகள் பெற்றிருந்தனர். இதனால் குலுக்கல் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குலுக்கல் முறை நடத்தப்பட்டு பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
வெற்றி நிலவரம்:
திருநெல்வேலி மாநகராட்சி மொத்த வார்டுகள் உள்ள 55 வார்டுகளில் 35 வார்டுகளில் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக 30 வார்டுகளிலும், அதிமுக 3 வார்டுகளிலும், சுயேச்சை 1 வார்டிலும், மதிமுக 1 வார்ட்டிலும் வெற்றி பெற்றுள்ளன.