Last Updated : 22 Feb, 2022 02:27 PM

 

Published : 22 Feb 2022 02:27 PM
Last Updated : 22 Feb 2022 02:27 PM

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஆலங்காயம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம் பேரூராட்சியை திமுக 11 இடங்களில் வென்று பேரூராட்சி நிர்வாகத்தை கைப்பற்றியது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள ஒவ்வொரு சுற்றின் அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதில்,நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அதிக வார்டுகளை திமுக கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய நகராட்சிகளை திமுகவே கைப்பற்றும் நிலை உள்ளது. வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் நகராட்சியில் இதுவரை 10 வார்டுகளில் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதிலும், திமுகவே அதிக வார்டுகளில் வெற்றிப்பெற்று முன்னிலையில் உள்ளது.

நாட்றாம்பள்ளி, ஆலங்காயம், உதயேந்திரம் ஆகிய 3 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. உதயேந்திரம், நாட்றாம்பள்ளி ஆகிய பேரூராட்சிகளின் பட்டியல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது ஆலங்காயம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன் விவரம்:

1- வது வார்டு திமுக வேட்பாளர் தமிழரசி 617 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

2- வது அதிமுக வேட்பாளர் சாந்தி 352 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். 3- வது திமுக வேட்பாளர் புவனேஷ்வரி 350 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

4- வது வார்டு திமுக வேட்பாளர் சுகுணா 746 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

5- வது வார்டு அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 375 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

6- வது வார்டு திமுக வேட்பாளர் உமா 418 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். 7- வது வார்டு திமுக வேட்பாளர் ஶ்ரீதர் 376 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார்.

8- வது வார்டு திமுக வேட்பாளர் அருள் 558 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். 9- வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ரத்தினவேலு 282 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

10- வது வார்டு திமுக வேட்பாளர் சுமதி 435 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

11- வது வார்டு திமுக வேட்பாளர் கமால் பாஷா 453 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

12வது வார்டு திமுக வேட்பாளர் நகீனா பேகம் 346 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

13வது வார்டு திமுக வேட்பாளர் சக்கரவர்த்தி 586 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். 14வது வார்டு திமுக வேட்பாளர் சரவணன் 415 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். 15வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பார்கவி 616 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் உள்ள 15 வார்டுகளில் திமுக 11 வார்டுகளிலும், அதிமுக 2 வார்டுகளிலும், சுயேட்சை 2 வார்டுகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. இதன் மூலம் ஆலங்காயம் பேரரூாட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x