Last Updated : 22 Feb, 2022 09:17 AM

 

Published : 22 Feb 2022 09:17 AM
Last Updated : 22 Feb 2022 09:17 AM

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: கோவையில் வெற்றியைப் பதிக்கும் திமுக

படங்கள்: ஜெ.மனோகரன்

கோவை: காலை 8.40 மணிக்கு வெளிவந்த முடிவுகள்படி, கோவை பேரூர் பேரூராட்சி 2-வது வார்டு திமுக வெற்றி. தொண்டாமுத்தூர் பேரூராட்சி 1-வது ,2-வது வார்டுகளில் திமுக வெற்றி. வேடபட்டி பேரூராட்சி 1-வது வார்டு அதிமுக வெற்றி. கண்ணம்பாளையம் பேரூராட்சி 1-வது வார்டு அதிமுக வெற்றி. பள்ளபாளையம் பேரூராட்சி 1-வது திமுக வெற்றி.

கருமத்தம்பட்டி நகராட்சி 1-வது, 2-வது, 3-வது வார்டுகளில் திமுக வெற்றி. தாளியூர் பேரூராட்சி 1-வது வார்டில் திமுக வெற்றி. காரமடை நகராட்சி 1-வது வார்டில் திமுக கூட்டணி சிபிஎம் வேட்பாளர் வெற்றி.3-வது வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அதன்படி கோவை பேரூர் பேரூராட்சி 2-வது வார்டு திமுக வெற்றி. தொண்டாமுத்தூர் பேரூராட்சி 1-வது ,2-வது வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பள்ளபாளையம் பேரூராட்சி 1-வது திமுக வெற்றி.

கோவை மாநகராட்சியின் 31-வது வார்டு, 62-வது வார்டில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை. 6-வது வார்டில் திமுக கூட்டணி காங் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது.

கோவையின் 41 உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் 41 உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடந்து வருகிறது. மாநகராட்சியின் 100 வார்டுகளில் பதிவான வாக்குகள், தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றன. இங்கு மாநகராட்சி தேர்தல் அலுவலர் ராஜகோபால் முன்னிலையில் அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

நகராட்சிகள்:

மேட்டுப்பாளையம் நகராட்சியில் பதிவான வாக்குகள் மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பொள்ளாச்சி நகராட்சியின் வாக்குகள் பொள்ளாச்சி, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியிலும், வால்பாறை நகராட்சியின் வாக்குகள், வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், காரமடை நகராட்சியின் வாக்குகள் காரமடை, மெட்ரோ மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், கூடலூர் நகராட்சியின் வாக்குகள் பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா பாலிடெக்னிக் கல்லூரியிலும், கருமத்தம்பட்டி நகராட்சியின் வாக்குகள் கருமத்தம்பட்டி புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மதுக்கரை நகராட்சியின் வாக்குகள் மதுக்கரை ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரியிலும் எண்ணப்பட்டு வருகிறது.

பேரூராட்சிகள் :

மோப்பிரிபாளையம், சிறுமுகை, அன்னூர் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அன்னூர் அமரர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆனைமலை, ஜமீன் ஊத்துக்குளி, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் பேரூராட்சிகளின் வாக்குகள் ஆனைமலை வி.ஆர்.டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பெரியநாயக்கன்பாளையம், நம்பர் 4 வீரபாண்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளின் வாக்குகள் பெரியநாயக்கன்பாளையம் பயனீர்மில்ஸ் மேல்நிலைப்பள்ளியிலும், கோட்டூர், சூளேஸ்வரன்பட்டி, சமத்தூர் பேரூராட்சிகளின் வாக்குகள் கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகிறது.

ஒத்தக்கால் மண்டபம், செட்டிபாளையம், வெள்ளலூர், கிணத்துக்கடவு, பெரிய நெகமம், எட்டிமடை, திருமலையாம்பாளையம் பேரூராட்சிகளின் வாக்குகள் பிரிமீயர் மில்ஸ் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், எஸ்.எஸ்.குளம், இடிகரை பேரூராட்சிகளின் வாக்குகள் கோவில்பாளையம் இன்ட்ரோ இன்ஸ்ட்டிடியூட் பொறியியல் கல்லூரியிலும், தாளியூர், தொண்டாமுத்தூர், வேடபட்டி, பேரூர் பேரூராட்சிகளின் வாக்குகள் வடவள்ளி மருதமலை தேவஸ்தான பள்ளியிலும், பூலுவப்பட்டி, ஆலாந்துறை, தென்கரை பேரூராட்சிகளின் வாக்குகள் ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சூலூர், கண்ணம்பாளையம், இருகூர், பள்ளப்பாளையம் பேரூராட்சிகளின் வாக்குகள் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு

மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை மையமான அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 2,500 போலீஸாரும், மற்ற 17 இடங்களில் 2,000 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் . கடும் சோதனைக்கு பிறகே வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x