Published : 22 Feb 2022 08:30 AM
Last Updated : 22 Feb 2022 08:30 AM

21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது திமுக: மகத்தான வெற்றியால் தொண்டர்கள் மகிழ்ச்சி

படம்: மு.லெட்சுமி அருண்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. 21 மாநகராட்சிகளையும் திமுக தன் வசமாக்கி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

நிகழ்நேரப் பதிவு நிறைவுபெற்றது

4.30 PM: வேலூர் மாநகராட்சி 18-வது வார்டில் பாஜக வேட்பாளர் சுமதி வெற்றி பெற்றதாக அறிவிப்பு

4.00 PM: கோவை மாநகராட்சி 100 வார்டுகள் உள்ள நிலையில், 55 வார்டுகளுக்கு முடிவு வந்துள்ள நிலையில், 51 வார்டுகளை திமுக கூட்டணி வென்று கோவை மாநகராட்சியை கைப்பற்றியது.

3.40 PM: வேலூர் மாநகராட்சி 18-வது வார்டில் பாஜக வெற்றி பெற்றதை அறிவிக்காமல் நிறுத்தி வைத்ததைக் கண்டித்து, வேலூர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவாயில் முன்பாக அமர்ந்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படம்: வி.எம்.மணிநாதன்.

3.10 PM: சிவகாசி மாநகராட்சி திமுக வசமானது. திமுக 24, அதிமுக 11, காங்கிரஸ் 6, மதிமுக 1, பாஜக 1, விசிக 1, சுயேச்சை 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. மொத்தமுள்ள 48 வார்டுகளில் சரிபாதியாக 24 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

2.48 PM: நாகர்கோவில் மாநகராட்சி (52 வார்டுகள்)

வெற்றி

திமுக + 32
அதிமுக- 7
பாஜக., 11
சுயேட்சை-2

வார்டுகள் வாரியாக.

1 வது வார்டு - தங்கராஜா, திமுக

2 வது வார்டு -செல்வகுமார் , காங்கிரஸ்.

3 வது வார்டு - அருள் சபிதா, காங்கிரஸ்.

4வது வார்டு - மகேஷ், திமுக.

5 வது வார்டு -உதயகுமார், மதிமுக.

6 வது வார்டு - அனுஷா பிரைட், காங்கிரஸ்.

7 வது வார்டு- மேரி ஜெனட் விஜிலா, திமுக

8 வது வார்டு - சேகர், அதிமுக

9 வது வார்டு - ராமகிருஷ்ணன், திமுக.

10 வது வார்டு - வளர்மதி, திமுக

11 வது வார்டு - ஸ்ரீ லிஜா, அதிமுக

12 வது வார்டு - சுனில் , பாஜக

13 வது வார்டு - ஆச்சியம்மா, பாஜக

14 வது வார்டு - கலாராணி, திமுக.,

15 வது வார்டு - லீலாபாய், திமுக.,

16 வது வார்டு - ஜவஹர், திமுக.,

17 வது வார்டு - செல்வி கௌசுகி, திமுக

18 - வது வார்டு - அமல செல்வன், திமுக.,

19 வது வார்டு - மோனிகா, திமுக

20 வது வார்டு - ஆனேறோனைட்சினைடா, பாஜக

21 வது வார்டு -ஜோனா கிறிஸ்டி ,திமுக

22 வது வார்டு - பால் தேவராஜ் அகியா, காங்கிரஸ்

23 வது வார்டு - விஜிலா ஜஸ்டஸ் , திமுக

24 வது வார்டு , - ரோஸிட்டா , பா.ஜ.க.,

25 வது வார்டு - அக்ஷயா கண்ணன், அதிமுக.

26 வது வார்டு - சொர்ணதாய், திமுக

27 வது வார்டு - கோபால் சுப்ரமணியம், அதிமுக

28 வது வார்டு - அனந்த லட்சுமி, திமுக

29 வது வார்டு - மீனா தேவ், பாஜக

30- வது வார்டு - சந்தியா, காங்கிரஸ்

31 வது வார்டு - சோபி, திமுக

32- வது வார்டு - சிஜி, காங்கிரஸ்

33- வது வார்டு - மேரி பிரன்ஸி லதா, திமுக

34 -வது வார்டு - தினகரன், பா.ஜ.க.,

35 வது வார்டு - ராணி, சுயேட்சை

36 வது வார்டு - ரமேஷ், பா.ஜ.க.,

37 வது வார்டு - செல்வலிங்கம் அலைஸ் செல்வம், அதிமுக

38- வது வார்டு - சுரேஷ், திமுக

39- வது வார்டு - பாத்திமா ரிஸ்வானா, திமுக.,

40 வது வார்டு - கோகிலா , திமுக

41 வது வார்டு - அனிலா , அதிமுக

42 வது வார்டு -ஸ்டாலின் பிரகாஷ், திமுக.,

43 வது வார்டு - விஜயன், அதிமுக.,

44 வது வார்டு - நவீன் குமார், காங்கிரஸ்

45 வது வார்டு - சதீஷ், பா.ஜ.க.,

46 வது வார்டு - வீரசூரப்பெருமாள் , சுயேட்சை

47 வது வார்டு - ஜெனிதா, திமுக

48 வது வார்டு- திமுக, பியாசா ஹாஜிபாபு

49 வது வார்டு - திமுக, ஜெயவிக்ரமனன்

50 வது வார்டு பாஜக அய்யப்பன்

51 வது வார்டு பாஜக முத்துராமன்

52வது வார்டு பாஜக S.ரமேஷ்

2.40 PM: கடலூர் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 45 வார்டுகளில் திமுக- 27, அதிமுக-6, விசிக-3, தமிழக வாழ்வுரிமைக் கட்சி-3, சுயேsசைகள்-3, காங்கிரஸ்-1, பாஜக-1, பாமக-1 வெற்றி.

திமுக தனித்து கடலூர் மாநகராட்சியை கைப்பற்றியது.

2.25 PM: ஈரோடு மாநகராட்சி 54-வது வார்டில் இரு வேட்பாளர்கள் சம அளவு வாக்கு பெற்ற நிலையில், குலுக்கல் மூலம் அதிமுக வேட்பாளர் சி.பாரதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

2.20 PM: சிவகாசி மாநகராட்சியும் திமுக வசமானது.

சிவகாசி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் விவரம் :

திமுக 24
அதிமுக 11
காங்கிரஸ் 6
பிஜேபி 1
விசிக - 1
மதிமுக 1
சுயேச்சை 4

2.10 PM: சேலம் மாநகராட்சி நிலவரம்: 32 திமுக, 4 அதிமுக , 1 சுயேச்சை

1.45 PM: கோவை மாநகராட்சி திமுக வெற்றி தொடர்கிறது: திமுக - 29, அதிமுக - 1, மார்கிஸிஸ்ட் - 3 காங்கிரஸ் - 3 எஸ் டி பி ஐ (சுயேச்சை)- 1

1.02 PM: தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்றாவது சுற்று முடிவின் படி, திமுக 24 வார்டுகளிலும், அதிமுக 5 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒன்று, பாஜக ஒன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று, மற்றும் சுயேட்சை இரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

1.00 PM: நாகர்கோவில் மாநகராட்சி 17 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட இளம்பெண் கெளசுகி 641 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.

1.00 PM: திருநெல்வேலி மாநகராட்சி மொத்த வார்டுகள் - 55. முடிவு அறிவிக்கப்பட்டது - 26

திமுக - 22
அதிமுக - 2
சுயேச்சை - 1
மதிமுக - 1

12.55 PM: திருச்சி மாநகராட்சியும் திமுக வசமாகிறது. 65 வார்டுகளில் 35 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

12.48 PM: திமுக வசமானது நாகர்கோவில் மாநகராட்சி:

நாகர்கோவில் மாநகராட்சி (52 வார்டுகள்)

வெற்றி விவரம்:

திமுக கூட்டணி- 26
அதிமுக- 3
பாஜக- 7
சுயேச்சை-1

வார்டுகள்.

1 வது வார்டு - தங்கராஜா, திமுக

2 வது வார்டு -செல்வகுமார் , காங்கிரஸ்.

3 வது வார்டு - அருள் சபிதா, காங்கிரஸ்.

4வது வார்டு - மகேஷ், திமுக.

5 வது வார்டு -உதயகுமார், மதிமுக.

6 வது வார்டு - அனுஷா பிரைட், காங்கிரஸ்.

7 வது வார்டு- மேரி ஜெனட் விஜிலா, திமுக

8 வது வார்டு - சேகர், அதிமுக
9 வது வார்டு - ராமகிருஷ்ணன், திமுக.

10 வது வார்டு - வளர்மதி, திமுக

11 வது வார்டு - ஸ்ரீ லிஜா, அதிமுக

12 வது வார்டு - சுனில் , பா.ஜ.க.,

13 வது வார்டு - ஆச்சியம்மா, பி.ஜே.பி.,

14 வது வார்டு - கலாராணி, திமுக.,

15 வது வார்டு - லீலாபாய், திமுக.,

16 வது வார்டு - ஜவஹர், திமுக.,

17 வது வார்டு - செல்வி கௌசுகி, திமுக

18 - வது வார்டு - அமல செல்வன், திமுக.,

19 வது வார்டு - மோனிகா, திமுக

20 வது வார்டு - ஆனேறோனைட்சினைடா, பா.ஜ.க.,

21 வது வார்டு -ஜோனா கிறிஸ்டி ,திமுக

22 வது வார்டு - பால் தேவராஜ் அகியா, காங்கிரஸ்

23 வது வார்டு - , திமுக

24 வது வார்டு , - ரோஸிட்டா , பா.ஜ.க.,

28 வது வார்டு - அனந்த லட்சுமி, திமுக

29 வது வார்டு - மீனா தேவ், பி.ஜே.பி.,

30- வது வார்டு - சந்தியா, காங்கிரஸ்

31 வது வார்டு - சோபி, திமுக

32- வது வார்டு - சிஜி, காங்கிரஸ்

33- வது வார்டு - மேரி பிரன்ஸி லதா, திமுக

34 -வது வார்டு - தினகரன், பா.ஜ.க.,

35 வது வார்டு - ராணி, சுயேட்சை

36 வது வார்டு - ரமேஷ், பா.ஜ.க.,

37 வது வார்டு - செல்வலிங்கம் அலைஸ் செல்வம், அதிமுக

38- வது வார்டு - சுரேஷ், திமுக

39- வது வார்டு - பாத்திமா ரிஸ்வானா, திமுக.,

40 வது வார்டு - கோகிலா , திமுக

12.44 PM: தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளில் அதிமுக வெறும் 6 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். திமுக 50 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது.

12.23 PM: தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் என கருதப்படும் அமைச்சர் கீதாஜீவனின் சகோதரர் ஜெகன் பெரியசாமி 20வது வார்டில் வெற்றி

12.30 PM: கரூர் மாநகராட்சியில் 23 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தலா 2 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது, சுயேச்சை 1 வார்டிலும், காங்கிரஸ் ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 பேர் திமுக ஆதரவாளர்கள் என்பதால் கரூர் மாநகராட்சி திமுக வசமாகிறது

12.20 PM: சேலம் மாநகராட்சி 15வது வார்டில் திமுக வேட்பாளர் உமாராணி 2205 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 55 வது வார்டில் திமுக வேட்பாளர் தனலட்சுமி 3327 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 24வது வார்டில் அதிமுக வேட்பாளர் சந்திரா கிருபாகரன் 1181 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

12.10 PM: சிவகாசி மாநகராட்சியில் திமுக முன்னிலை: மொத்த வார்டுகள்: 48. இவற்றில் திமுக- 14, காங்கிரஸ்- 1 இடத்தைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. அதிமுக- 11 இடத்தையும், சுயேச்சை 4 இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

12.00 PM: மதுரை மாநகராட்சி 1 2 3 4 5 6 14 15 16 25 36 37 38 43 44 46 56 71 70 74 78 79 84 51 54 அகிய முப்பது வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

11.45 AM: திருநெல்வேலி மாநகராட்சியில் இதுவரை அறிவித்துள்ள தேர்தல் முடிவுகளின்படி திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் இம்மாநகராட்சியை திமுக கைப்பற்றுகிறது. இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 17 வார்டுகளில் திமுக 13 இடங்களிலும், மதிமுக ஒரு இடத்திலும், அதிமுக 2 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

11.35 AM: சேலம் மாநகராட்சி 41 வது வார்டில் திமுக வேட்பாளர் பூங்கொடி வெற்றி பெற்றுள்ளார். 23வது வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி வெற்றி பெற்றுள்ளார்.

11.30 AM: மதுரை மாநகராட்சி் மொத்த வார்டுகள் : 100 முடிவு அறிவிக்கப்பட்ட வார்டுகள் : 30

வெற்றி நிலவரம் :
திமுக - 17
அதிமுக - 5
சிபிஎம்-2
காங் - 2
விசிக - 1
மதிமுக -2
பாஜக -1

11.20 AM: திருநெல்வேலி மாநகராட்சி 35 வது வார்டில் திமுக வேட்பாளர் பேச்சியம்மாள் வெற்றி பெற்றுள்ளார்.

11.15 AM: சென்னை மாநகராட்சியில் 196வது வார்டில் அதிமுக வேட்பாளர் அஸ்வினி கருணா வெற்றி பெற்றுள்ளார். 2 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சி பட்டியலின பெண் மேயர் பதவிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின் படி 22 இடங்களில் திமுக அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலை, வெற்றி பெற்றுள்ளன.

11.10 AM: திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகளில் திமுக 12, அதிமுக 1, பாஜக 1 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

11.00 AM: கரூர் மாநகராட்சி 11 வது வார்டில் அதிமுக வேட்பாளர் தினேஷ் குமார் 26 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதிமுகவின் முதல் வெற்றி . திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் திமுக உதயசூரியன்
சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் திமுக 26 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைய, தென்னை மர சின்னத்தில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் வழக்கறிஞர் ஜெயராமன் வெறும் 11 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

10.50 AM: தூத்துக்குடி மாநகராட்சி 31,32,33 ஆகிய வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி. 34- வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி, 35- வார்டு அதிமுக வேட்பாளர் வெற்றி, 37 - சுயேச்சை வேட்பாளர் வெற்றி, 38- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் வெற்றி.

10.35 AM: நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகள் நிலவரம்: (மொத்த வார்டுகள் 52)

1 வது வார்டு - தங்கராஜா, திமுக

2 வது வார்டு -செல்வகுமார் , காங்கிரஸ்.

3 வது வார்டு - அருள் சபிதா, காங்கிரஸ்.

4வது வார்டு - மகேஷ், திமுக.

5 வது வார்டு -உதயகுமார், மதிமுக.

6 வது வார்டு - அனுஷா பிரைட், காங்கிரஸ்.

7 வது வார்டு- மேரி ஜெனட் விஜிலா, திமுக

8 வது வார்டு - சேகர், அதிமுக

28 வது வார்டு - அனந்த லட்சுமி, திமுக

29 வது வார்டு - மீனா தேவ், பி.ஜே.பி.,

30- வது வார்டு - சந்தியா, காங்கிரஸ்

31 வது வார்டு - சோபி, திமுக

வெற்றி எண்ணிக்கை: திமுக + 10, அதிமுக-1, பாஜக., 1 சுயேச்சை-0

10.32 AM: கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 இடங்களில்' முதல் சுற்றில் எண்ணப்பட்ட 14 வார்டுகளில் திமுக 10 இடங்களையும், சுயச்சை இரு இடங்களையும், காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 1 இடங்களை கைப்பற்றியுள்ளது.

10. 30 AM: மதுரை மாநகராட்சியில் முடிவு அறிவிக்கப்பட்ட 21 வார்டுகளில் திமுக 11, சிபிஎம் 2, காங் 2 விசிக1, மதிமுக 1 அதிமுக 4 இடங்களில் வெற்றி.

10.25 AM: தூத்துக்குடி மாநகராட்சி வார்டு 1,3,4,5,6,7,8,9,11,12,13,15 - ஆகிய வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 10-வது வார்டில் அதிமுக வெற்றி பெற்றார். 14-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். 2-வது வார்டில் சுயேச்சை வெற்றி பெற்றுள்ளார்.

10.20 AM: திருநெல்வேலி மாநகராட்சி 47-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் அபி அமீர் பாத்து வெற்றி. திருநெல்வேலி மாநகராட்சி 34-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்..

10.17 AM: நாகர்கோவில் மாநகராட்சி 5வது வார்டு மதிமுக வேட்பாளர் உதய குமார் வெற்றி பெற்றுள்ளார்.

10.15 AM: வேலூர் மாநகராட்சி: 37-வது வார்டில் திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார்.

திருநங்கை கங்கா

10.10 AM: ஈரோடு மாநகராட்சியில் 6 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் பெற்றுள்ளார்.

10. 06 AM: கோவை மாநகராட்சி 4வது வார்டில் திமுக வேட்பாளர் கதிர்வேல்சாமி வெற்றி பெற்றார்.

10. 05 AM: சென்னை மாநகராட்சியில் திமுக வேட்பாளர்கள் 21 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

10.05 AM: ஈரோடு மாநகராட்சி 18 வது வார்டில் திமுக வேட்பாளர் காட்டு சுப்பு வெற்றி பெற்றார். 34-வது வார்டில் திமுக வேட்பாளர் ரேவதி திருநாவுக்கரசு வெற்றி பெற்றார். 43 வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் சாராமா ஜாபர் சாதிக் வெற்றி பெற்றார்.

10.00 AM: ஈரோடு மாநகராட்சி 10 வார்டில் திமுக கூட்டணிக் கட்சியான கொங்கு நாடு தேசிய கட்சி வேட்பாளர் குமரவேல் வெற்றி பெற்றார்.

9. 55 AM: தஞ்சாவூர் மாநகராட்சி 51 வார்டுகளில், முதல் சுற்றில் எண்ணப்பட்ட 12 வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

9. 52 AM: சேலம் மாநகராட்சி 22வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே சி செல்வராஜ் வெற்றி. சேலம் மாநகராட்சி 53வது வார்டில் திமுக கூட்டணி வேட்பாளர் ஷாதாஜ் பக்ஷூ 710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

9. 52 AM: நாகர்கோவில் மாநகராட்சி 1வது வார்டில் திமுக வேட்பாளர் தங்கராஜா வெற்றி. இரண்டாவது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர்.செல்வகுமார் வெற்றி. 3 வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் அருள்சபிதா வெற்றி. 29 வது வார்டில் பாஜக வேட்பாளர் மீனாதேவ் வெற்றி. 28வது வார்டில் திமுக வேட்பாளர் அனந்த லட்சுமி வெற்றி.

9. 51 AM: கோவை மாநகராட்சியின் 7-வது வார்டில் காங் வேட்பாளர் வெற்றி. 76-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி.

9.50 AM: திருநெல்வேலி மாநகராட்சி 15-வது வார்டில் திமுக வேட்பாளர் அஜய் வெற்றி பெற்றார்.

9. 48 AM: சிவகாசி மாநகராட்சியில் முதல் 10 வார்டுகளில் 6 வார்டுகளில் அதிமுக வும் 4 வார்டுகளில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

9. 46 AM: தூத்துக்குடி மாநகராட்சி 12 வார்டில் திமுக வேட்பாளர் தெய்வேந்திரன் 815 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

9. 45 AM: தூத்துக்குடி மாநகராட்சி 2-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் சுப்புலெட்சுமி பொன்ராஜ் மொத்தம் 1166 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் 769, அதிமுக வேட்பாளர் 306 வாக்குகள் பெற்றனர். 397 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் சுப்புலெட்சுமி வெற்றி பெற்றார்.

9. 44 AM: திருச்சி மாநகராட்சி 9-வது வார்டில் திமுகவின் நாகலட்சுமி அறிவுடைநம்பி (3062) வெற்றி பெற்றார்.

9.40 AM: மதுரை மாநகராட்சி 72வது வார்டில் அதிமுக வேட்பாளர் கருப்பசாமி வெற்றி பெற்றார்.

கருப்பசாமி அதிமுக

9. 35 AM: தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு எண் 12 இல் திமுக வேட்பாளர் வெங்கடேசன் 1211 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

9. 34 AM: திருச்சி மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 30-வது வார்டில் மதிமுகவின் ஜி.கதீஜா (3952), 39-வது வார்டில் காங்கிரஸின் எல்.ரெக்ஸ் (2482), 44-வது வார்டில் திமுகவின் பியூலா மாணிக்கம் (2824), 58-வது வார்டில் திமுகவின் கவிதா செல்வம் (2906) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். ( அடைப்புக் குறிக்குள் உள்ளது வாக்கு எண்ணிக்கை)

9. 34 AM: தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு எண் 11ல் திமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் 1533 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

9. 33 AM: சேலம் மாநகராட்சியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தெய்வ லிங்கம் ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

9.31 AM: கோவை மாநகராட்சியின் 31-வது வார்டு மற்றும் 62-வது வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்..5-வது வார்டில் திமுக கூட்டணியில் உள்ள காங் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

9.30 AM: சேலம் மாநகராட்சி 37வது வார்டில் திமுக வேட்பாளர் திருஞானம் வெற்றி

9.20 AM: திருநெல்வேலி மாநகராட்சி 31-வது வார்டில் அதிமுக வேட்பாளர் அமுதா வெற்றி

9.15 AM: தூத்துக்குடி மாநகராட்சி நிலவரம்:

1-வது வார்டு - முதல் சுற்று

திமுக - 116

அதிமுக - 22

அமமுக - 221

சுயேச்சை - 289

2-வது வார்டு - முதல் சுற்று

திமுக - 213

அதிமுக - 87

அமமுக - 281

சுயேச்சை - 279

3-வது வார்டு - முதல் சுற்று

திமுக - 206

அதிமுக - 154

பாஜக - 41

சுயேச்சை - 157

தூத்துக்குடி மாநகராட்சி 12,13 மற்றும் 15வது வார்டு உள்ளிட்ட பல வார்டுகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. 11 வது வார்டில் காங்கிரஸ் முன்னிலை வகிக்க14 வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.

9.00 AM: தூத்துக்குடி மாநகராட்சி 1 வது வார்டில் குலையுடன் கூடிய தென்னை மர சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட கவிதா முன்னிலை வகிக்கிறார்.

8.45 AM: சென்னை, ஆவடி, .தாம்பரம்,.காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கோவை, திருப்பூர், ஈரோடு ,சேலம், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர்,.மதுரை, .திண்டுக்கல், சிவகாசி, நெல்லை ,தூத்துக்குடி, நாகர்கோவில், ஒசூர் ஆகிய21 மாநகராட்சிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் திமுக 7 மாநகராட்சிகளில் முன்னிலை வகிக்கிறது.

8.30 AM: சேலம் மாநகராட்சியில் தாமதம்: சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் ஓட்டு எண்ணிக்கை சேலம் சக்திகைலாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் துவங்கியது. இங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்குள் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முகவர்களை போலீசார் தீவிர சோதனைக்கு உட்படுத்தி ஒவ்வொருவராக உள்ளே செல்ல அனுமதித்தனர் . சேலம் மாநகராட்சி 60 வார்டுகளுக்கும் ஒரே இடத்தில் வாக்கு என்னும் மையம் அமைக்கப்பட்டதால் முகவர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லும் முகவர்கள் அலைபேசி, ஏர்-பட்ஸ், ப்ளூடூத் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

இதனால், போலீஸார் ஒவ்வொரு முகவரையும் தனிப்பட்ட முறையில் சோதனைக்கு உட்படுத்தி உள்ளே செல்ல அனுமதித்தால் , காலை 8 மணிக்கு துவங்க வேண்டிய ஓட்டு எண்ணும் பணி காலதாமதமாக 8 . 25 மணிக்கு துவங்கியது. மேலும் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் உடனடியாக அனுப்ப வேண்டி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முகவர்களை அனுப்புவதில் ஏற்பட்ட கால தாமதத்தால் சேலம் மாநகராட்சியில் ஓட்டு எண்ணும் பணி கால தாமதத்துடன் துவங்கியது.

8. 10 AM: மதுரையில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு: மதுரையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் செய்தி சேகரிக்க செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மூலம் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, மங்கையர்கரசி கல்லூரி, பரவை, பாத்திமா காலேஜ் விளாங்குடி வக்பு போர்டு காலேஜ் கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

8 AM: முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

> தூத்துக்குடி மாவட்டத்தில் 396 நகர்ப்புற உள்ளாட்சி பதவிக்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 9 வாக்கு எண்ணும் மையங்களில் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணியை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்

பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.

தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x