

சென்னை: அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் கே. பழனிசாமி, அந்நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொழிலதிபர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களை நேரடியாக சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பும் விடுத்தார்.
இதேபோல், பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில்தொடங்க முன்வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் அழைப்பு விடுத்திருந் தார்.
192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சி
இந்நிலையில், 192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சி துபாயில்நடைபெற உள்ளது. மார்ச் மாதம்இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இதில், தமிழக அரசின் சார்பில் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மற்றும் பெருந்தொழில்கள் பற்றியஅரங்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கத்தின் மூலம் தமிழ கத்தில் தொடங்க அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
இதைத்தொடர்ந்து, மார்ச் இறுதியில் துபாயில் தமிழகம் சார்பில் அமைக்கப்படும் காட்சி அரங்கை திறந்து வைத்து, பங்கேற்பதுடன், முதலீடுகளை ஈர்க்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வரான பின், மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் அயல்நாட்டுப் பயணமாக இது அமையும்.