Published : 22 Feb 2022 06:09 AM
Last Updated : 22 Feb 2022 06:09 AM
சென்னை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கேரள கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 22-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
23-ம் தேதி தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், 24-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைபெய்யக் கூடும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT