இந்திய - இலங்கை மீனவர்கள் இடையிலான நட்பில் கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு பிறகுதான் பாதிப்பு: முதல்வரை சந்தித்த இலங்கை அமைச்சர் குழுவினர் தகவல்

இந்திய - இலங்கை மீனவர்கள் இடையிலான நட்பில் கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு பிறகுதான் பாதிப்பு: முதல்வரை சந்தித்த இலங்கை அமைச்சர் குழுவினர் தகவல்
Updated on
1 min read

கச்சத்தீவு உடன்படிக்கைக்கு பிறகுதான் இந்திய - இலங்கை மீனவர்கள் நட்பில் பாதிப்பு ஏற்பட்டதாக சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த இலங்கை அமைச்சர் குழுவினர் தெரிவித்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் துணை தலைவரும், பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டைமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சமூக உட்கட்டமைப்பு துறைஅமைச்சருமான ஜீவன் தொண்டைமான், இலங்கை எம்.பி. ராமேஸ்வரன் உள்ளிட்டோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, பல்வேறுகோரிக்கைகளை முன்வைத்தனர். இலங்கை தமிழர் நலன், மீனவர்பிரச்சினை குறித்தும் பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் இலங்கை குழுவினர் கூறியதாவது:

1974-76 ஆண்டு கச்சத்தீவு உடன்படிக்கைக்கு பிறகுதான் இந்திய - இலங்கை மீனவர்கள் நட்பில் பாதிப்பு ஏற்பட்டது. இருபுறமும் மீனவர்களின் வாழ்க்கை நிம்மதியற்று உள்ளது. அப்போது போடப்பட்ட ஒப்பந்தம் முறையாக இல்லைஎன்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதுகுறித்து, முதல்வரிடம் தெரிவித்தபோது, பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இலங்கைக்கு பல்வேறு உதவிகளை இந்தியா செய்து வருகிறது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வழியாக இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in