

கோவையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வேட்பாளர்களின் விவரம் அடங்கிய சுவரொட்டியை பள்ளிகளின்சுவர்களில் பசைகொண்டு ஒட்டியதால், கற்றல் சார்ந்த ஓவியங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் அரசுப்பள்ளிகளில்தான் அமைக்கப்பட் டன. பல அரசுப் பள்ளிகளில் பொதுமக்கள், தன்னார்வலர்களின் நன்கொடையால் உள்புற, வெளிப்புற சுவர்களில் பல வண்ண ஓவியங்கள், பாடம் தொடர்புடைய படைப்புகள், கற்றல் சார்ந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தேர்தலின்போது, வேட்பாளர்கள் விவரம் அடங்கிய போஸ்டரை முழுவதும் பசைகொண்டு சுவர் களில் ஒட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக, அரசுப் பள்ளி களின் தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, “தன்னார்வலர்கள் உதவியோடும், அரசு நிதியிலும் பல பள்ளிகளின் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளைக் கவரும்வகையில் வர்ணம் பூசப்பட்டுள் ளது. பசை கொண்டு போஸ்டர் ஒட்டியதால், அவற்றை அகற்ற சிரமம்ஏற்படுவதுடன், கற்றல் சார்ந்தஓவியங்களும் சேதமாகிவிடுகின் றன. தனியார் பள்ளிகளில் இப்படி செய்தால் மீண்டும் அதை சரிசெய்து கொள்ள நிதி எளிதாக கிடைக்க வாய்ப்புள்ளது. அரசுப் பள்ளிகளில் அதற்கான வாய்ப்பில்லை. இனிவரும் தேர்தல்களிலாவது பள்ளிகளின் சுவரில் முழுவதும் பசை கொண்டு ஒட்டாமல், இரண்டு பக்கம் ஒட்டும் ஸ்டிக்கர் கொண்டு போஸ்டர் களை ஒட்ட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.