Published : 22 Feb 2022 06:10 AM
Last Updated : 22 Feb 2022 06:10 AM
தமிழகத்தில் பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்திருப்பது சமூக அமைதியை குலைக்கும் செயலாகும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள் ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
கர்நாடகாவில் ஹிஜாப் அணிய தடைவிதிக்கும் கர்நாடகபாஜக அரசை எதிர்த்து இந்துக்கள், கிறிஸ்தவர்கள், எழுத்தாளர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் உட்பட அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் இந்துக்கள் தமது குழந்தை களுக்கு ஹிஜாப் அணிவித்து புகைப்படம் எடுத்து பதிவேற்றி ஆதரவு தெரிவிக்கின்றனர். ஹிஜாப் வழக்கில் வாதாடியவர்களில் பிராமணர் சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும் இருந்தார் என்பதே இங்கு சமூக நல்லிணக்கம் நிலைத்து நிற்பதற்கான சாட்சியாக உள்ளது.
இந்தச் சூழலில் பூணூல் அறுக்கும் போராட்டம் என சிலர் அறிவித்திருப்பது சமூக அமைதியை சீர்குலைப்பதாக உள்ளது. மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு பதில் பகைமையை கூர் தீட்டும் இம்முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இந்த அறிவிப்பு வன்மையான கண்டனத்துக்குரியது.
அனைத்து மக்களாலும் புறந்தள்ளப் படவேண்டியது. மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
இவ்வாறு அவர் அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT