வாடகை நிலுவை ரூ.4 கோடி செலுத்தவில்லை மயிலாப்பூர் கிளப் அலுவலகத்துக்கு சீல்: அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

வாடகை நிலுவை ரூ.4 கோடி செலுத்தவில்லை மயிலாப்பூர் கிளப் அலுவலகத்துக்கு சீல்: அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: வாடகை நிலுவைத் தொகை ரூ.4 கோடியை செலுத்தாததால் மயிலாப்பூர் கிளப் அலுவலகம், கட்டிடத்துக்கு அறநிலையத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலுக்கு சொந்தமாக லஸ் சர்ச் சாலையில் உள்ள 42 கிரவுண்ட் 1,566 சதுரஅடி பரப்பளவுள்ள மனை, மயிலாப்பூர் கிளப்புக்கு 99 வருட நீண்டகால குத்தகைக்கு விடப்பட்டது. கடந்த 2000-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி குத்தகை காலம் முடிவடைந்தது. மயிலாப்பூர் கிளப் நிறுவனத்தினர் கடந்த 2007-ம் ஆண்டு மே 18-ம் தேதி 18 கிரவுண்ட் 1,581 சதுரஅடி நிலத்தை ஒப்படைத்தனர். தற்போது மயிலாப்பூர் கிளப்பிடம் 23 கிரவுண்ட் 2,385 சதுரஅடி பரப்பளவுள்ள மனை அனுபவத்தில் உள்ளது.

புதிதாக நிர்ணயம் செய்த வாடகையை செலுத்தாததால் கடந்த டிசம்பர் 22, ஜனவரி 6 ஆகிய தேதிகளில் அறிவிப்பு அனுப்பப்பட்டது. அதை எதிர்த்து மயிலாப்பூர் கிளப் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று (நேற்று) மயிலாப்பூர் கிளப் நியாய வாடகை நிலுவைத் தொகையில் ஒரு பகுதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை கோயிலின் தக்கார் மற்றும் இணை ஆணையரிடம் வழங்கினர்.

எனினும், வாடகை நிலுவை கடந்த ஜன.31-ம் தேதி வரை ரூ.4 கோடியே 7 லட்சத்து 86,731 ஆகும். எனவே, அதிக வாடகை நிலுவை வைத்துள்ளதால் அந்த இடத்தில் உள்ள கட்டிடம் மற்றும் அலுவலகம் ஆகியவை பூட்டி சீலிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in