மதுரை மாநகராட்சி பொன்விழா ஆண்டை முன்னிட்டு புதுப்பொலிவுடன் தயாராகும் மதுரை மாநகராட்சி மன்ற கூடம்

மதுரை மாநகராட்சி பொன்விழா ஆண்டை முன்னிட்டு புதுப்பொலிவுடன் தயாராகும் மதுரை மாநகராட்சி மன்ற கூடம்
Updated on
1 min read

மதுரை மாநகராட்சி மன்றக் கூடத்தை புதுப்பிக்கும் பணிகள் இரவு பகலாக நடக்கின்றன.

மதுரை மாநகராட்சி 1971-ல் நக ராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு புதிய கவுன்சிலர்கள் பொறுப்பேற்றதும் பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. அதற்காக பொன்விழா ஆண்டு மாநகராட்சியை நினைவுபடுத்தும் வகையில் நினைவுத் தூண், புதிய கவுன்சிலர்களை வரவேற்கும் வகையில் மாமன்ற கூடம் பராமரிப்பு மற்றும் மைய அலுவலகத்தின் சிதிலமடைந்த கட்டிடம் பராமரிப்பு பணிகள் தற்போது இரவு, பகலாக தீவிரமாக நடக்கிறது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் ரூ.3.5 கோடி ஒதுக்கி புதிய மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்புக்கு முன் மாநகராட்சி கட்டிடத்தை புதுப்பொலிவுடன் தயார் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி மேயர் அறையும் புதுப்பிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், புதிய மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்ற பிறகு மாநகராட்சி பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. அதற்காக மாநகராட்சி முன் நுழைவு வாயிலில் பிரம்மாண்ட நூற்றாண்டு தூண் அமைக்கப்படுகிறது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in