

குன்னூர், கே.வி.குப்பம் தொகுதிக் கான திமுக வேட்பாளர்களை மாற்றக் கோரி அக்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி காமராஜர் சதுக்கத் தில் தற்போதைய குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் கா.ராமச்சந்திரனின் ஆதரவாளர் கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதுடன், திமுக வேட்பாளர் கள் அறிமுகக் கூட்டம் நடந்த மண்டபத்துக்கு பேரணியாகச் சென்று கோஷங்கள் எழுப்பி னர். அப்போது, முபாரக் ஆதர வாளர்களும் கோஷமிட்டனர்.
வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்துக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வருவதாக கூறப்பட்ட நிலையில், மண்டப வளாகத்தில் ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து, ஆ.ராசா மற்றும் திமுக வேட்பாளர்கள் பா.மு.முபாரக் (குன்னூர்), மு.திராவிடமணி (கூடலூர்) ஆகியோர் வந்த வாகனங்களை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட் டது. மேலும், ஆ.ராசாவின் வாகனம் மீது செருப்பு வீசப்பட் டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக க.ராமச்சந் திரன் எம்எல்ஏ கூறும்போது, “மாவட்டச் செயலாளர் பதவியை முபாரக்குக்கு விட்டுக்கொடுத் தால், எனக்கு குன்னூரில் போட்டி யிட சீட் வழங்குவதாக உறுதி யளித்து, ஆ.ராசா ஏமாற்றிவிட்டார். தலைமையின் நடவடிக்கையை கவனித்து, அடுத்தகட்ட நட வடிக்கை எடுக்கப்படும். மாவட்டச் செயலாளர் பதவியாவது வழங் கினால்தான், தேர்தல் பணியாற்ற முடியும்’’ என்றார்.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக அமலு விஜயன் அறிவிக்கப்பட்டார். அவரை மாற்றக் கோரி, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதி திமுக நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் ஒன்றியக் குழு தலைவரும் கடந்த முறை கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வருமான சீதாராமன் தலைமையில் இப்போராட்டம் நடக்கிறது. இந்நிலையில் நேற்றும் கே.வி.குப்பம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.