அதிக வாக்குகளை பெற்றுத் தந்தால் உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு: கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக வாக்குறுதி

அதிக வாக்குகளை பெற்றுத் தந்தால் உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு: கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக வாக்குறுதி
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுத் தந்தால், அடுத்துவரும் உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்குவதாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு, விருதுநகர் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வாக்குறுதி அளித்தார்.

விருதுநகர் தொகுதி திமுக, கூட்டணிக் கட்சி செயல்வீரர் கூட்டம், விருதுநகரில் நேற்று நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் திருச்சுழி தொகுதி வேட்பாளருமான தங்கம் தென்னரசு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் மற்றும் காங்கிரஸ், திக, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகி கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தங்கம் தென்னரசு பேசுகையில், திமுக தேர்தல் அறிக்கையை வீடு வீடாக விவரமாக எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன் பேசுகையில், வேட் பாளர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் சேவை மனப்பான்மை உடையவர். கடந்தமுறை நம்மை தோற்கடித்தது அதிமுக கூட்டணிக் கட்சிகள் தான். இப்போது, ஒத்தைக்கு ஒத்தையாக களத்தில் சந்திப்போம். கூட்டணிக் கட்சிகள் உறுதுணையாக இருந்து தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று தந்தால், அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் உரிய வாய்ப்பு அளிப்போம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in