

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான ‘நெட்’ தகுதித் தேர்வு ஜூன் 29-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான கல்லூரி உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு (நெட்) ஜூன் 29-ம் தேதி நடத்தப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், உளவியல், வரலாறு, அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர் ஆவர். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். உதவி பேராசிரியர் தகுதிக்கு வயது வரம்பு கிடையாது. ஜே.ஆர்.எப். (ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப்) தகுதிக்கு மட்டும் வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 28 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. தேர்வுக்கு www.ugcnetonline.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் மே 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.