உங்களுக்கு தெரியுமா... உள்ளாட்சித் தேர்தலை நாங்கள் நடத்தவில்லை: அண்ணாமலைக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பதில்

உங்களுக்கு தெரியுமா... உள்ளாட்சித் தேர்தலை நாங்கள் நடத்தவில்லை: அண்ணாமலைக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பதில்
Updated on
1 min read

சென்னை: ”உள்ளாட்சித் தேர்தல்களை நாங்கள் நடத்தவில்லை” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

”நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் எந்தத் தடங்கலும் இல்லாமல் நடந்து முடிந்ததாக திமுக அரசு கூறி வரும் நிலையில், வாக்குப்பதிவு நாளில் தமிழகம் கண்ட முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை இந்த வீடியோ பதிவில் காணலாம். வாக்குப் பதிவு நாளில் இந்திய தேர்தல் ஆணையம் கண்களை மூடிக் கொள்ளாது என்று நம்புகிறோம்” என்று இந்திய தேர்தல் ஆணையத்தைக் குறிப்பிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வீடியோவுடன் கூடிய பதிவை பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அண்ணாமலையின் பதிவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் DID YOU KNOW? (உங்களுக்கு தெரியுமா?) என்ற தலைப்பில் பதிலளித்துள்ளது.

அதில், ”கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. இந்த உள்ளாட்சி தேர்தல்கள் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 243 K & 243 ZA-ன் கீழ் தனி அதிகாரிகளால் அதாவது மாநில தேர்தல் ஆணையங்களால் நடத்தப்படுகின்றன. உங்கள் புகாருக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்” என பதிலளித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in