25 தொகுதிகளில் எஸ்டிபிஐ தனித்துப் போட்டி: 10 வேட்பாளர்கள் அறிவிப்பு

25 தொகுதிகளில் எஸ்டிபிஐ தனித்துப் போட்டி: 10 வேட்பாளர்கள் அறிவிப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் 25 தொகுதிகளிலும், புதுச் சேரியில் 3 தொகுதிகளிலும் எஸ்டிபிஐ கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் அமீர் ஹம்சா (துறைமுகம்), புஷ்பராஜ் (திருவிக நகர் (தனி)), ரபீக் அகமது (கம்பம்) ஷேக் மீரான் (வேலூர்) ஷரீப் சேட் (திருவாடனை), நஜ்மா (மதுரை மத்தி), ஜாபர் அலி (கடையநல்லூர்), ரபீக் (ராயபுரம்), ராகுல் ஹமீது (பாளையங்கோட்டை), காசிநாத துரை (மானாமதுரை (தனி)) ஆகிய 10 வேட்பாளர்களை அறிவித்துள்ளோம்.

இதுதவிர முதுகுளத்தூர், தாம்பரம், சிதம்பரம், ஓசூர், அறந்தாங்கி, பழனி, கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பட்டுக்கோட்டை, பாப நாசம், ஈரோடு, சேலம் கிழக்கு,சங்கராபுரம், திருப்பூர் தெற்கு என மொத்தம் 25 தொகுதி களிலும், புதுச்சேரியில் 3 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திமுகவுடனான கூட்டணி முயற்சி தோல்வி அடைந்துள்ள நிலையில் எஸ்டிபிஐ கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in