தமிழக ஆளுநர் மகள் திருமண நிகழ்வு: உதகை ராஜ்பவனில் மூன்றடுக்கு பாதுகாப்பு

தமிழக ஆளுநர் மகள் திருமண நிகழ்வு: உதகை ராஜ்பவனில் மூன்றடுக்கு பாதுகாப்பு
Updated on
1 min read

உதகை: உதகையில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகள் திருமண நிகழ்வு 2 நாட்கள் நடைபெறவுள்ளதால், மாளிகையைச் சுற்றி மூன்று அடக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகளின் திருமண நிகழ்ச்சிகள் இன்றும் நாளையும் உதகையில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருமண முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கோவையில் இருந்து உதகை வந்து ராஜ்பவனில் தங்கியுள்ளார்.

இரு நாட்களும் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் ராஜ்பவன் முழுவதும் புதுப்பிக்கப்பட்டது. திருமணத்துக்காக ராஜ்பவன் முழுவதும் தோரணங்கள், நுழைவு வாயில்களில் தென்னங்கீற்று, வாழை, பாக்கு மரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. திருமணத்துக்கு வந்துள்ள விருந்தினர்கள் பாதுகாப்பு காரணமாக தனியார் ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.

திருமணத்தை முன்னிட்டு ராஜ்பவனை சுற்று வட்டார பகுதிகளில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசு தாவரவியல் பூங்காவிலேயே தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு, வாகன தணிக்கை செய்யப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in