

காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு பேசியபோது, “காங்கிரஸ்- திமுக இடையே விரோதத்தை ஏற்படுத்தியவர்கள் இப்போது காங்கிரஸில் இல்லை.
திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் ஜெரோம் ஆரோக்கியராஜ், கடந்த காலத்தில் திமுக ஆதரவுடன் மாநகராட்சி கோட்டத் தலைவர் பதவியில் இருந்தார்.
இப்போது அவரை இந்தத் தேர்தலில் வெற்றி பெற வைத்து, எம்எல்ஏவாக பதவி உயர்த்துவது திமுகவினரின் கடமை. கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் போட்டியிடுவதாகக் கருதி திமுகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில், திருச்சி கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெரோம் ஆரோக்கியராஜ் மற்றும் திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.