Published : 20 Feb 2022 06:44 AM
Last Updated : 20 Feb 2022 06:44 AM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் வாக்களிக்காதது ஏன்?

சேலம்: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான பழனிசாமியின் சொந்த ஊர் ஊரக உள்ளாட்சி அமைப்பில் இடம்பெற்றுள்ளதால், நேற்றைய தேர்தலில் அவர் வாக்களிக்கவில்லை.

கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் அப்போதைய முதல்வராக இருந்த பழனிசாமி எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் வாக்களித்தார். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள அவருக்கான வாக்குரிமை, தனது சொந்த ஊரான எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ளது. இக்கிராமம் ஊரக உள்ளாட்சி அமைப்புக்கு உட்பட்டதாகும். இதனால், நேற்றைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வாக்களிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x