

தமிழக மக்கள் தேசிய நீரோட்டத்துக்கு வர வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்தார்.
நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற சங்கம் 24 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த அமைப்பின் வேட்பாளர் களை ஆதரித்து மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சென்னை அம்பத்தூரில் நேற்று பேசியதாவது:
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறது. மோடி ஆட்சியில் 21 கோடியே 60 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன. இதன் மூலம் வங்கிகளுக்கு ரூ.36 ஆயிரம் கோடி நிதி சேர்ந்துள்ளது.
முத்ரா திட்டத்தின் மூலம் 2 கோடியே 70 லட்சம் பேருக்கு தொழில் கடன் கிடைத்துள்ளது. நாடு வேகமாக வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக் கிறது. இதே நிலை தொடருமே யானால் இந்தியா உலகில் முதல் இடத்தை விரைவில் எட்டும்.
இந்த வளர்ச்சி தமிழகத்திலும் தொடர தமிழக மக்களே தேசிய நீரோட்டத்துக்கு வாருங்கள். அப்படி செய்தீர்கள் எனில் மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் பல நன்மைகள் தமிழக மக்களுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் தேவநாதன், பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ், மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட பலர் பேசினர்.