

சிவகாசி மாநகராட்சியை அதிமுக கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் மண்டலத்தில் 1-வது வார்டு பாலாஜி நகரில் வசிக்கிறார். இவர் திருத்தங்கல் எஸ்.ஆர்.அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பழனிசாமி முதல்வராக இருந்தபோதுதான் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளை இணைத்து சிவகாசி மாநகராட்சியாக ஆக்கினோம். சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் நான் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். எனவே சிவகாசி மாநகராட்சி தேர்தலில் அதிமுக 38 இடங்களுக்கும் மேலாக வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றும் என்றார்.