முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாக்களிக்கவில்லை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாக்களிக்கவில்லை
Updated on
1 min read

காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீடு கண்டனூர் பேரூராட்சி 7-வது வார்டு மோதிலால் தெருவில் உள்ளது. இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் அவரும், அவரது குடும்பத்தினரும் அருகே உள்ள சிட்டாள் ஆச்சி உயர்நிலைப் பள்ளியில் வாக்களிப்பது வழக்கம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர் தலில் கண்டனூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 10-ல் திமுக, 3-ல் காங்கிரஸ் போட்டியிடுகின்றன. 7 மற்றும் 15-வது வார்டில் திமுக, காங்கிரஸ் கூட்டணியினர் போட்டி யிடவில்லை.

ப.சிதம்பரம் வீடு இருக்கும் 7-வது வார்டில் பாஜக, அமமுக மற்றும் 2 சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். இந்நிலையில் நேற்று ப.சிதம்பரம் வாக்களிக்கவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் அலு வலகத்தை தொடர்பு கொண்டு நிர்வாகிகளிடம் கேட்டபோது, அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in