

திண்டுக்கல் மாவட்டத்தில் மறியல், கட்சியினரிடையே வாக்குவாதம் எனப் பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கே வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 10-வது வார்டில் வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழு தானது. இதனால் வாக்குப் பதிவு அரை மணி நேரத்துக்கும் மேலாக தாமதமானது. வேறு இயந்திரம் வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
9-வது வார்டு மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் தேவையின்றி கட்சியினர் வந்து சென்றனர். இது குறித்து திமுக, அதிமுக வேட்பாளர்களின் பிரதிநிதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
28-வது வார்டு பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யினர் வீடுகளுக்குச் சென்று வாக்காளர்களை அழைத்து வருவதாகவும், பணம் வழங்குவ தாகவும் குற்றம் சாட்டி அதிமுக உட்பட அனைத்து வேட்பாளர் களும் வாக்குச்சாவடி முன் மறி யல் செய்தனர். 31-வது வார்டில், அம்சா என்ற பெண் ஆம்புலன்ஸில் வந்து ஸ்ட்ரெச்சரில் படுத்தவாறு சென்று வாக்களித்தார்.
திண்டுக்கல் மாநகராட்சி காந்திஜி பள்ளியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தனது குடும்பத்தினருடன் வாக்க ளித்தார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன் னாள் மேயர் மருதராஜ் ஆகியோர் மாநகராட்சி வாக்குச்சாவடிகளில் தங்கள் குடும்பத்தினருடன் வாக் களித்தனர். திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் டட்லி மேல்நிலைப் பள்ளியில் குடும்பத்தினருடன் வாக்களித்தார். திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று டி.ஐ.ஜி. ரூபேஸ் குமார்மீனா, எஸ்பி சீனிவாசன் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை பார்த்தனர்.
திண்டுக்கல் 28-வது வார்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை கண்டித்து மறியல் செய்த அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் பார்வையாளர் ஜெசிந்தாலாசரஸ் பல இடங்க ளுக்குச் சென்று ஆய்வு செய்தார்.
கொடைக்கானல், பழநி, ஒட்டன் சத்திரம் நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.