

எஸ்டிபிஐ கட்சிக்கு உருளை சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சட்டப்பேரவை தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி தமிழகத்தில் 25 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 3 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளது. எஸ்டிபிஐ கட்சிக்கு தேர்தல் ஆணையம் காஸ் சிலிண்டர் (எரிவாயு உருளை) சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்த சின்னத்தில்தான் எஸ்டிபிஐ வேட் பாளர்கள் போட்டியிடுவர். இவ் வாறு அவர் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இணைந்த எஸ்டிபிஐ கட்சி, தொகுதிப் பங் கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த அணியில் இருந்து விலகியது.
இதையடுத்து, தமிழகத்தில் குறிப்பிட்ட 25 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. முதல்கட்டமாக 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.