Published : 19 Feb 2022 02:14 PM
Last Updated : 19 Feb 2022 02:14 PM

நீலகிரி: 55 பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகள்; மெல்ல சூடுபிடித்த வாக்குப்பதிவு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் காலை 11 மணி வரையில் பேரூராட்சிகளில் 22.42 மற்றும் நகராட்சிகளில் 19.70 என 20.87 சதவீதம் வாக்குகள் பதிவானது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் 108 பதவியிடங்கள், பேரூராட்சிகளில் 186 பதவியிடங்கள் என மொத்தம் 294 பதவியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் அதிகரட்டி, பிக்கட்டி மற்றும் கேத்தி பேரூராட்சிகளில் தலா ஒரு வேட்பாளர் வீதம் 3 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 291 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த 291 பதவியிடங்களுக்கு மொத்தம் 1253 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் 1,55,380 ஆண் வாக்காளர்களும், 167723 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும் என மொத்தம் 3,23,111 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தலுக்கு 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 55 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டு, அந்த வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்கள் மற்றும் நேரடி ஒளிப்பரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மெல்ல சூடுப்பிடித்தது.

உதகை காந்தலில் உள்ள பதற்றமான சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டத்தில் காலை 11 மணி வரையில் பேரூராட்சிகளில் 22.42 மற்றும் நகராட்சிகளில் 19.70 என 20.87 சதவீதம் வாக்குகள் பதிவானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x