

திருப்பூர்: திருப்பூரில் 42 - வது வார்டில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இன்று காலை 7 மணி தொடங்கி வாக்குப்பதிவு நடக்கிறது.
திருப்பூர் மாநகராட்சி 42 - வது வார்டு பார்ப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில், 406 - வது வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக வாக்குப் பதிவு துவங்கவில்லை.
இதனால் வாக்குப்பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. புதிய இயந்திரம் கொண்டுவரப்பட்டு பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்காததால் மக்கள் அனைவரும் நீண்ட நேரமாக வரிசையில் காத்து இருக்கின்றனர்.
முன்னதாக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் இன்று திருப்பூர் முத்தூர் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்கு பதிவு மையத்தில் தனது வாக்கை செலுத்தினார்.