அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்பப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும்: கால்நடை பராமரிப்பு செயலர் திட்டவட்டம்

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், இந்த நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய விலங்குகள் நல வாரியம் அமைத்துள்ள குழுவின் தலைவர் எஸ்.கே.மிட்டல், தமிழக கால்நடை பராமரிப்புத் துறை செயலர் ஜவஹர், ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், இந்த நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய விலங்குகள் நல வாரியம் அமைத்துள்ள குழுவின் தலைவர் எஸ்.கே.மிட்டல், தமிழக கால்நடை பராமரிப்புத் துறை செயலர் ஜவஹர், ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Updated on
1 min read

சென்னை: 2023-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தும்போது காளைகளுக்கு ஏற்படும் வலி மற்றும் துன்பத்துக்கு ஆளாகாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை செயலர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கால்நடைத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், இந்திய விலங்குகள்நல வாரியம் இந்த நிகழ்வுகளைஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் குழு ஒன்றை அமைத்துள்ளது. அதன் தலைவர் எஸ்.கே.மிட்டல், கால்நடை பராமரிப்புத் துறை செயலர், ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது கால்நடை பராமரிப்புத் துறை செயலர் ஜவஹர்பேசும்போது, “காளைகளுக்குஏற்படும் துன்பங்கள் குறித்தும்அதை தவிர்ப்பதில் அதிகாரிகள், அமைப்பாளர்கள், காளைஉரிமையாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு உள்ள பங்கு மற்றும் பொறுப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் போதிய விளம்பரம் செய்து,விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

1978-ம் ஆண்டு விலங்குகள்போக்குவரத்து விதிகள் மற்றும் அதன் அடுத்தடுத்த திருத்தங்கள் குறித்தும் மாவட்ட அலுவலர்களுக்கு தெரியப்படுத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.

மேலும், 2023-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை மிகவும் முன்னதாகவே தொடங்கலாம். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான பரிந்துரைகளை முன்கூட்டியே அனுப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்படும். இதனால் நிகழ்ச்சிஅமைப்பாளர்களுக்கு உட்கட்டமைப்பை ஏற்பாடு செய்யப் போதுமான நேரம் கிடைக்கும்.

இதன்மூலம் காளைகள் தேவையற்ற வலி மற்றும் துன்பத்துக்கு ஆளாகாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் கால்நடை பராமரிப்பு செயலர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in