Published : 18 Apr 2016 08:03 AM
Last Updated : 18 Apr 2016 08:03 AM

விஜயகாந்த் எங்கே போட்டி?

தேமுதிக மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை 85 தொகுதிகளுக்கு வேட் பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீத முள்ள 19 தொகுதிகளுக்கு வேட்பாளர் கள் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக, விஜயகாந்த் போட்டியிடும் தொகுதி அறிவிக்கவில்லை.

இதற்கு முந்தைய தேர்தல்களில் விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதி களில் போட்டியிட்டு விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என் பது குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக நிர்வாகி களிடம் கேட்டபோது, ‘‘விழுப்புரம் மாவட் டத்தில் விஜயகாந்த் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. விழுப்புரம், ரிஷி வந்தியம், சங்கராபுரம், உளுந்தூர் பேட்டை ஆகிய தொகுதிகளில் எதாவது ஒரு தொகுதியில் போட்டி யிடுவார்.

இந்த 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு குறித்து, மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளிடம் விஜயகாந்த் ஆய்வு நடத்தி வருகிறார். எனவே, இன்று மாலையில் அவர் போட்டியிடும் தொகுதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறாம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x