Published : 12 Apr 2016 08:38 AM
Last Updated : 12 Apr 2016 08:38 AM

திருச்சியில் நாளை நடக்கிறது: பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் - அமித்ஷா பங்கேற்கிறார்

திருச்சியில் நாளை நடக்கும் பாஜக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித் தார்.

இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை 84 தொகு திகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் இதை அனைவரும் உணர்வார்கள். கணிசமான இடங்களில் பாஜக வெற்றி பெறுவது உறுதி.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக் கப்பட்டது போக மீதமுள்ள தொகுதி களில் பாஜக போட்டியிடும். 13-ம் தேதி (நாளை) திருச்சியில் நடைபெறும் பாஜக வேட்பாளர்கள் அறிமுகக் கூட் டத்தில் கட்சியின் தேசியத் தலை வர் அமித்ஷா பங்கேற்கிறார். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த தலை வர்கள், மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரவுள்ளனர். அவர்களின் பிரச்சார பயணத் திட்டம் விரை வில் அறிவிக்கப்படும்.

மதுவிலக்கு

தமிழகத்தில் ஒரு தலை முறையே மதுவுக்கு அடிமையாக திமுக, அதிமுவே காரணம். எனவே, படிப்படியாக மதுவிலக்கு அமல் படுத்தப்படும் என்ற அதிமுகவின் அறிவிப்பையும், பூரண மதுவிலக்கு சட்டம் கொண்டு வரப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியையும் மக்கள் நம்ப மாட்டார்கள்.

திமுக தேர்தல் அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. பழைய கஞ்சியை புதிய மொந் தையில் தந்திருக்கிறார்கள். கச்சத்தீவு மீட்பு, சேது சமுத்திரத் திட்டம் போன்ற திமுகவின் வாக்குறுதிகள் மக்களிடம் எடுபடாது. மக்கள் நலக் கூட்ட ணியில் இணைந்துள்ள தேமுதிக, தமாகா போன்ற கட்சிகள் தேர்தல் முடிவுகள் வெளியானதும் வருந்து வார்கள். இந்த அணியால் வரும் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற் படுத்த முடியாது. இவ்வாறு தமிழிசை கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x