Published : 21 Apr 2016 03:50 PM
Last Updated : 21 Apr 2016 03:50 PM

அதிமுக கூட்டணியில் மஜக-வின் தொகுதி மாற்றம்

அதிமுக கூட்டணியில் தொகுதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேலூர் தொகுதி மனிதநேய ஜனநாயக கட்சிக்கு கொடுத்து விட்டு, அதற்கு பதிலாக ஒட்டன்சத்திரம் தொகுதியை அதிமுக பெற்றது. அத்தொகு தியில் அதிமுக சார்பில் கிட்டு சாமி நிறுத்தப்படுகிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர் தலில் அதிமுக 227 தொகுதி களில் போட்டியிடுகிறது. 7 தொகுதிகள் கூட்டணி. கட்சிக ளுக்கு ஒதுக்கப்பட்டன. கூட்டணி கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடு கின்றன. அதிமுக சார்பில் 227 தொகுதிகளுக்கும் வேட் பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தமிமுன் அன்சாரியின் மனித நேய ஜனநாயக கட்சிக்கு நாகப்பட்டினம், ஒட்டன் சத்திரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப் பட்டன. இதில், நாகப்பட்டினம் தொகுதியில் எம்.தமிமுன் அன் சாரியும், ஒட்டன்சத்திரம் தொகு தியில் ஆருண் ரஷீதும் போட்டி யிடுவதாக மனிதநேய ஜனநாயக கட்சி அறிவித் திருந்தது.

இந்நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப் பட்ட ஒட்டன்சத்திரம் தொகு தியை அதிமுக எடுத்துக்கொண் டுள்ளது. அதற்கு பதிலாக மஜகவுக்கு வேலூர் தொகுதி தரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற் றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு பதிலாக வேலூர் தொகுதி ஒதுக் கப்படுகிறது. திண்டுக்கல் மாவட் டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு அதிமுக சார்பில் தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளர் கே.கிட்டு சாமி வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேலூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட அதிமுக வேட் பாளர் ப.நீலகண்டனை வாபஸ் பெறுவதாகவும் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரியிடம் கேட்ட போது, ‘‘கூட்டணி பேச்சு வார்த்தையின்போது நாங்கள் அளித்த பட்டியலில், ஒட்டன் சத்திரம் இல்லை; வேலூர் இருந்தது. ஒட்டன்சத்திரம் தொகு தியைப் பொறுத்தவரை எங்க ளுக்கான களம் அல்ல. எங்க ளுக்கு வேலூர் தொகுதியை அளிக்க வேண்டும் என கடந்த 10 தினங்களுக்கு முன்பு அதி முக தலைமைக்கு கடிதம் அளித் தோம். இக்கடிதத்தை பரிசீலித்து, வேலூர் தொகுதியை எங்களுக்கு அளித்துள்ளனர். வேலூர் தொகுதியில், ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட ஆருண் ரசீதே போட்டியிடுகிறார். நான், நாகை தொகுதியில் போட்டியிடுகிறேன்’’ என்றார்.

வேலூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் ப.நீலகண்டனை வாபஸ் பெறுவதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x