பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7 முதல் நேரடி வகுப்புகள்: செய்முறைத் தேர்வு ஜூன் 13-ல் தொடக்கம்

பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7 முதல் நேரடி வகுப்புகள்: செய்முறைத் தேர்வு ஜூன் 13-ல் தொடக்கம்

Published on

சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மார்ச் 7-ம் தேதி நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள்இணையவழியில் நடந்து வருகின்றன. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொறியியல் மாணவர்களுக்கு இணையவழி செமஸ்டர் தேர்வுகள் முடிவடைந்ததும், 2, 3, 4-ம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஜூன் 11-ம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், நடப்பு செமஸ்டருக்கான செய்முறை தேர்வு ஜூன் 13-ம் தேதியும், எழுத்து தேர்வு ஜூன் 22-ம் தேதியும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள் ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in