

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைக்கு சுமூக முடிவு காணும் வரை அந்நாட்டு மீனவர்களுக்கு இந்திய அரசு எவ்வித உதவியும் செய்யக் கூடாது என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளி யிட்ட அறிக்கையில் அவர் கூறி யிருப்பதாவது:
முல்லைத் தீவில் உள்ள இலங்கை மீனவர்களுக்கு 150 படகு கள், மீன்பிடி கருவிகளை வழங்க இந்திய அரசு முன்வந்திருப்பதாக வும், இதற்கான ஒப்பந்தம் விரை வில் கையெழுத்தாகும் என்றும் கடந்த 3-ம் தேதி கொழும்பு கெஜட் என்ற ஆவணத்திலும், தமிழகத்தில் வெளிவரும் சில நாளிதழ்களிலும் செய்திகள் வந்துள்ளன.
மன்னார் பகுதி தமிழக மீனவர் களுக்காக கடந்த 2013-ல் இந்திய அரசு வழங்கிய 150 படகுகள் அவர் களுக்கு முழுமையாக கிடைக்க வில்லை. அமைச்சருக்கு வேண்டி யவர்களுக்கே கிடைத்தது என இலங்கை தேசிய மீனவர் சம்மேள னத்தின் தலைவர் சதாசிவம் தெரி வித்திருந்தார்.
இந்நிலையில் இதன் அடுத்த கட்டமாக ரூ. 4 கோடியே 50 லட்சம் மதிப்பில் 150 படகுகள், மீன்பிடி கருவிகளை முல்லைத் தீவில் உள்ள 300 மீன வர்களுக்கு இலவசமாக வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, படகுகள், வலைகள், சேதப்படுத்துவது என அடுக்கடுக்கான துன்பங்கள் தொடர்ந்து வருகின்றன. இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர் களையும், அவர்களின் படகுகளை யும் மீட்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தமிழகத் தலைவர்கள் இந்திய அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
இலங்கை அரசு நினைத்தால் சில மீனவர்களை விடுவிப்பார்கள். ஆனால், படகுகளை திரும்ப ஒப்படைப்பதில்லை. இந்நிலையில், இலங்கை மீனவர்களுக்கு 150 படகு களை வழங்குவது தமிழக மீன வர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை மீனவர்களிடம் இந்திய அரசு காட்டும் அக்கறையை தமிழக மீனவர்களிடமும் காட்ட வேண்டும் என்றுதான் திரும்பத் திரும்ப மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறோம்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், அவர்களின் படகுகள் விடுவிக்கப்பட வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண் டும். இதுபோன்ற பிரச்சினை களுக்கு முடிவு காணும் வரை இலங் கைக்கு எவ்விதமான உதவிகளை யும் இந்திய அரசு செய்யக்கூடாது. தமிழக மக்களின் இந்தக் கோரிக் கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.