Published : 12 Apr 2016 08:18 AM
Last Updated : 12 Apr 2016 08:18 AM

காங். வேட்பாளர்களை தேர்வு செய்ய குழு: இளங்கோவன், ப.சிதம்பரம் பங்கேற்பு

காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 27 பேர் குழுவின் கூட் டம் நடைபெற்றது.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளின் பெயர் கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதி களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய இளங்கோவன் தலைமையில் 27 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் மேலிடம் அமைத்துள்ளது

27 பேர் குழு

முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், கே.வீ.தங்கபாலு, மணிசங்கர் அய்யர், எம்.கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சி யப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், சு.திரு நாவுக்கரசர், பிரபு, மூத்த தலைவர் குமரிஅனந்தன், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.கோபிநாத், தேசிய செய்தித் தொடர்பாளர்கள் குஷ்பு, சி.ஆர்.கேசவன், எஸ்.சி. பிரிவுத் தலை வர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடை பெற்றது. விருப்ப மனு அளிக்காதவர் களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடையாது என இளங்கோவன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து வள்ளல்பெருமான், எம்.என்.கந்தசாமி உள்ளிட்ட 25க்கும் அதிகமான ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் தலா ரூ. 5 ஆயிரம் செலுத்தி விருப்ப மனு அளித்தனர்.

திமுக கூட்டணியில் இருப்ப தால் 41 தொகுதிகளிலும் போட்டியிட கடும்போட்டி ஏற்பட்டுள்ளது இளங்கோவன், ப.சிதம்பரம், தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கர சர், ஜே.எம்.ஆருண், நாசே ராமச்சந்திரன், அன்பரசு ஆகியோர் தங்களது வாரிசு களுக்காக தொகுதிகளை கேட்டு வருகின் றனர். இதனால் புதியவர்களுக்கும், குடும்பப் பின்னணி இல்லாத இளை ஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் வேதனை தெரிவித்தார்.

வேட்பாளர் பட்டியல்

வேட்பாளர் பட்டியல் ஆலோசனைக் கூட்டம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் கேட்டபோது, ‘‘41 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டதும் கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இன்னும் ஒரு வாரத்தில் வேட்பாளர் பட்டியல் டெல்லியில் வெளியிடப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x