

திண்டிவனம் நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து காந்தி சிலை அருகே நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரபொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது:
திமுக ஆட்சிக்கு வந்து 10 மாதங்களில் என்ன செய்துள்ளது? அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டப் பணிகள் தொடர்ந்ததே தவிர வேறு பணிகள் நடைபெற்றதா? பெயரளவுக்குதான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது. நிர்வாக திறமை இல்லாத முதல்வராக ஸ்டாலின் உள்ளதால்தான் இந்த அவலநிலை. திமுக தன் உண்மையான முகத்தை இன்னமும் காட்டவில்லை. எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால் உங்களுக்கு எதுவும் செய்யமாட்டோம் என்று தேர்தல் விதிமுறைகளை மீறி மிரட்டுகின்றனர். தேர்தல் ஆணையம் திமுகவின் தேர்தல் பிரிவாக செயல்படுகிறது.
திமுகவினருக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் என்று அறிவிக்கப்பட்டதும் இதுவரை நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு வழங்கப்பட்ட இருசக்கர வாகனத்திற்கான மானியத்தை இந்த அரசு நிறுத்திவிட்டது.
அதிமுக ஆட்சியில் மாநிலத்தி லேயே கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் நம் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டுஎன் மீது கொலைவெறி தாக்குதல்நடத்தப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின் எனக்கு தரப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. கொலை வழக்கு விசாரணைக்கு வரும் நேரத்தில் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. என்னை கொல்ல மீண்டும் சதி நடைபெறுகிறதோ என்று நினைக்கிறேன். எனக்கு அளிக் கப்பட்ட துப்பாக்கி உரிமை புதுப்பிக்கப் படவில்லை என்று தெரிவித்தார்.