Published : 24 Apr 2016 09:29 AM
Last Updated : 24 Apr 2016 09:29 AM

தொகுதி மாறி போட்டியிடும் விவகாரம்: தேமுதிக எம்எல்ஏவுடன் பொன்முடி ரகசிய ஒப்பந்தம்?

விழுப்புரம் மாவட்டத்தில் தொகுதி மாறி போட்டியிடும் திமுக வேட்பாளர் பொன்முடி, தேமுதிக எம்எல்ஏ வெங்கடேசன் இருவரும் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு தொகுதி மாறி போட்டியிடுவதாக இரு கட்சியினரும் பேசிக்கொள்கின்றனர்.

விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்ட முன்னாள் அமைச் சரும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான பொன்முடி 3 முறை வெற்றியும், 2 முறை தோல்வியும் அடைந்துள்ளார். தற்போது 6-வது முறையாக சட்டப் பேரவைத் தேர்தலில் களமிறங்கி யுள்ள பொன்முடி, இந்த முறை தொகுதி மாறி திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இது திமுகவினரிடம் மட்டுமல்ல அதி முகவினர் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த முறை திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேமுதிக எம்எல்ஏ வெங்கடேசன், இந்த முறை விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார். திருக்கோவிலூர் தொகுதியில் வாக்காளர்களிடம் நல்ல பெயருடன் இருப்பதாகக் கூறப்படும் வெங்கடேசன், தொகுதி மாறி விழுப்புரத்தில் போட்டியிடுவது தேமுதிகவினர் மத்தியில் குழப் பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் திமுக - தேமுதிக கூட்டணி குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடந்து கொண் டிருக்கும்போது இருவரும் தொகுதி மாறி போட்டியிடுவது என்று பேசி வைத்திருந்ததாக கூறப்படு கிறது. கூட்டணி ஏற்பட்டிருந்தால் விழுப்புரத்தை தேமுதிகவுக்கும், திருக்கோவிலூரை திமுகவும் பெற்றுக்கொள்வதாக பேசப் பட்டிருந்ததாம்.

கூட்டணி ஏற்படாத நிலையிலும் பொன்முடி - வெங்கடேசன் இடையேயான கூட்டணி தொடர் வதாகவும், இதனால் இருவரும் ஒருவருக்கொருவர் தொகுதி மாறி நிற்பதாகவும் கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதன்மூலம் விழுப்புரம் திமுகவினர் வெங்கடேசனுக்கு வேலை செய்ய பொன்முடி பரிந்துரைத்திருப்பதாகவும், திருக் கோவிலூரில் தேமுதிகவினர் பொன் முடிக்கு தேர்தல் வேலை செய்ய பரிந்துரைத்திருப்பதாகவும் கூறப் படுகிறது. இவர்களின் எழுதப் படாத கூட்டணி இரு கட்சி தொண்டர் களையும் உற்சாகப்படுத்தி இருப்ப தாகவே கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x