

தமிழகம் முழுவதும் உள்ள வேலையில்லா ஏழைகளுக்கு இலவச தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள தகுதியான மாணவ, மாணவிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்காட் கல்வி சங்கம், அடையாறு தியொசோபிகல் சங்கம், டைட்டன் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் எஸ்.ஜி.பி.எஸ். உன்னதி பவுண்டேஷன் இப்பயிற்சியை வழங்குகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆங்கிலம், கணினி, டேலி, அழகுக் கலை, வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு திறமைகள் குறித்து பயிற்சியளிக்கப்படும். இளைஞர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் அளிக்கப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, பட்டம், பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ படித்தவர்கள், பள்ளி கல்லூரி படிப்புகளை தொடர முடியாதவர்கள் சேரலாம். 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் இதில் சேர தகுதியானவர்கள்.
பயிற்சியில் சேரும் வெளியூர் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி, தங்கும் வசதி, உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி காலம் 50 நாட்கள். பயிற்சியை முடிப்பவர்களுக்கு சிறந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும்.
பயிற்சி வகுப்புகள் நடக்கும் முகவரி : வேலைவாய்ப்பு பயிற்சி மையம், தாமோதர் கார்டன்ஸ், புளூ கிராஸ் ரோடு, தியொசோபிகல் சங்கம், பெசன்ட் நகர், சென்னை. அடுத்த வகுப்புகள் இம்மாதம் 18-ம் தேதி தொடங்கவுள்ளன. விருப்பமுள்ளவர்கள் பிரியதர்ஷினி என்பவரை 09944084682 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.