வேலூர் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணுமா?- ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்கு இறுதி வடிவம் வழங்க கோரிக்கை

வேலூர் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணுமா?- ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்கு இறுதி வடிவம் வழங்க கோரிக்கை
Updated on
2 min read

வரலாற்று பெருமை கொண்ட வேலூர் கோட்டை மாநகராட்சியை கைப்பற்றுபவர்கள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வேலூர் நகரம், முதல் இந்திய சுதந்திர போராட்டத்தின் வித்தாக கருதப்படும் வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியின் வீரத்தை பறைசாற்றும் வரலாற்றை கொண்டது. இந்தியாவில் அகழி யுடன் கூடிய ராணுவ ரீதியாக கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்த கோட்டை என்ற பெருமை கொண்டது. புகழ்பெற்ற வேலூர் சிஎம்சி, விஐடி பல்கலைக்கழகம், பொற்கோயிலால் நகரம் பெருமை அடைகிறது.

வேலூர் நகராட்சி 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1947-ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1979-ல் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2008-ம் ஆண்டு 40 வார்டுகள் கொண்ட நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகரின் முதல் மேயராக கார்த்திகேயன் பொறுப்பேற்றார்.

தொடர்ந்து மாநகர எல்லை விரிவாக்கத்தில் தாராபடவேடு, சத்துவாச்சாரி நகராட்சிகளுடன் அல்லாபுரம், தொரப்பாடி, சேண்பாக்கம் பேரூராட்சிகள் மற்றும் அருகில் உள்ள கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டன.

வேலூர் மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 60 வார்டுகளுடன் 2011-ம் ஆண்டு முதல் மாநகர தேர்தலில் அதிமுகவின் மேயராக கார்த்தியாயினி வெற்றிபெற்றார். மாநகரையும் அதிமுக கைப்பற்றியது. தற்போது, மாநகராட்சி இரண்டாவது தேர்தலை சந்திக்கிறது. நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலை யில் திமுகவும், அதிமுகவும் 56 வார்டுகளில் நேரடியாக மோது கின்றன.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் 2 வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றிபெற்ற நிலையில் அதிமுக வின் 4 வேட்பாளர்களின் மனுக் கள் தள்ளுபடி ஆனதால் சேதாராத்துடன் பயணத்தை தொடங்கி யுள்ளனர். தேர்தல் முடிவு வெளி யாகும்போது அதிமுக கப்பலின் சேதத்தை பார்க்க முடியும்.

மக்களின் எதிர்பார்ப்பு

மாநகர மக்களின் பெரும் ஏக்கமாக இருப்பது ‘ரூ.1,000 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எப்போதுதான் முடிப்பீர்கள்’ என்ற கேள்விதான். இதற்கு இறுதி வடிவம் கிடைத்தால் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் விருது பெற்ற மாநகராட்சி குப்பையை எரிக்காமல் முறையாக அகற்ற வேண்டும், கழிவுநீர் கால்வாய்களில் இருந்து எடுக்கப்படும் மண்ணை சுத்தப்படுத்த மாற்று ஏற்பாடு, கோட்டை அகழி நீர் வெளியேறும் ஆங்கிலேயர் காலத்து கால்வாயை மீட்பது, கன்சால்பேட்டை, இந்திரா நகர் பகுதியில் உள்ள நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்று வது, மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.

மாற்றுப்பாதை

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நிதி ஒதுக்கி கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோட்டை சுற்றுச்சாலையை பயன் பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், வேலூர்-காட்பாடிக்கான மாற்றுப்பாதையை ஆய்வு செய்ய வேண்டும்.

கிருபானந்த வாரியார் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரை அகற்றி மீண்டும் நகர பேருந்து சேவையை தொடங்க வேண்டும், மழைக்காலங்களில் ஆரணி சாலையில் ரேமண்ட் ஷோரூம் பகுதியில் தேங்கும் நீரை வெளியேற்ற வெங்க டேஸ்வரா பள்ளி வழியாக இணைப்பு கால்வாய் அமைக்க வேண்டும்.

ஓட்டேரி பூங்காவுடன் மாநக ராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களை பராமரிக்க வேண் டும், மார்க்கெட் இடமாற்ற பணியை விரைவுபடுத்த வேண்டும், பைபாஸ் சாலையில் உள்ள மோட்டார் வாகன பணிமனைகளை இடமாற்றம் செய்ய வேண்டும், நான்கு மண்டலங்களிலும் மின் மயானம் அமைக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in