டிவி, சமூக ஊடகங்களிலும் இன்று மாலை 6 மணி வரை மட்டுமே பிரச்சாரத்துக்கு அனுமதி: மாநில தேர்தல் ஆணையம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மாலை 6 மணிக்கு மேல் தொலைக்காட்சி, வாணொலி, சமூக ஊடங்களில் பரப்புரைகள் செய்வதற்கு அனுமதியில்லை என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

மேற்குறிப்பிட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை தொடர்பாக, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தொலைக்காட்சிகள், வானொலிகள், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களில் இன்று (17.02.2022) மாலை 6.00 மணி வரை மட்டும் தேர்தல் பரப்புரை மற்றும் விளம்பரங்கள் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.

எனவே, மாலை 6.00 மணிக்கு மேல் தொலைக்காட்சிகள், வானொலிகள், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களில் தேர்தல் பரப்புரைகள் மற்றும் விளம்பரங்கள் செய்வதற்கு அனுமதியில்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in