Published : 17 Feb 2022 06:58 AM
Last Updated : 17 Feb 2022 06:58 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சொந்தமான ரூ.2,043 கோடி மதிப்புள்ள நிலங் கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர் பி.கே.சேகர்பாபு, பல்வேறு மாவட்டங்களில் உள்ளகோயில்களில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க நடவடிக்கை எடுப்பதோடு, ஆக்கிரமித்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்த வர்கள் மீது வழக்குப்பதிவு செய் யப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, 540.39 ஏக்கர் நிலம், 496.1748 கிரவுண்டு சதுரஅடி மனைகள், 20.1434 கிரவுண்டு கட்டிடம்,46.2077 கிரவுண்டு திருக்குளக்கரைஆகியவை 991 ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. இதன் தற்போதைய மதிப்பு ரூ.2,043 கோடி ஆகும்.
குறிப்பாக, கும்பகோணம் மாவட்டம் ஒப்பிலியப்பன் கோயிலுக்கு அருகில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலுக்கு சொந்தமான 3.47 ஏக்கர் நிலம் மற்றும் குத்தகைக்கு விடப்பட்டிருந்த 6.9 ஏக்கர்நிலம் மீட்கப்பட்டது. திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவானைக்காவல் அருகே,ரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுடன் இணைந்த கத்ரி தயாராம் சிவ்ஜிஅறக்கட்டளைக்குச் சொந்தமான55 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடி ஆகும்.
திருப்பூர், தாராபுரம் வட்டம், கந்தசுவாமி பாளையம் கன்னமார் கருப்பண்ண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்புள்ள 2.75 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அரியலூர், உடையார்பாளையத்தைச் சேர்ந்த மதுரா சொக்கலிங்கபுரத்தில் சிதம்பரம் சபாநாயக்கர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வரதராஜப்பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான வி.புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள 31.86 ஏக்கர் புன்செய் நிலம் தனிநபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கையாக கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 'HRCE' என்ற நிலஅளவைக் கல் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து, ஆக்கிரமிப்பு நிலங்களைக் கண்டறிந்து அவற்றை மீட்டு திருக்கோயில் மற்றும் கட்டளைகளுக்குச் சொந்தமான நிலங்களை திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறவும், பட்டா மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT