Published : 17 Feb 2022 09:12 AM
Last Updated : 17 Feb 2022 09:12 AM
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கை, உயர் நீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலமுருகன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு ரூ.13,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டபோதும், ரூ.7 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை வசூலிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு அடிப்படை தகவல்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடரக்கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, ரூ.5,000 அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்கிறோம். இந்த தொகையை மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு 15 நாட்களில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு அடிப்படை தகவல்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடரக்கூடாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT