

தேமுதிக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது மனைவி, மைத்துனர் என உறவினர்களை மாற்று வேட்பாளராக்க கூடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
தேமுதிக மூத்த நிர்வாகிகள், வேட்பாளர்கள் 104 பேர், மாவட்டச் செயலாளர்கள் 54 பேர் மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் என 500-க்கும் மேற்பட்டோர் சேலத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற விஜயகாந்த், பல்வேறு முக்கிய அறிவுரைகளை கட்சியினருக்கு வழங்கியுள்ளார்.
வேட்பு மனுத்தாக்கலின் போது வழங்கப்படும் படிவம் ஏ மற்றும் பி-யின் மாதிரிகளை அளித்து அதனை சரியாக பூர்த்தி செய்வதற்கு பயிற்சி அளிக் கப்பட்டது. முக்கியமாக, வேட் பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது, மனைவி, மைத்துனர் என குடும்ப உறவினர் களை மாற்று வேட்பாளர் ஆக்காமல், கட்சிக்காக உழைத்த வர்களை மாற்று வேட்பாளராக முன்மொழிய வேண்டும் என விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டத்தில் பேசிய விஜய காந்த், ‘‘தேமுதிக மக்கள் நலக் கூட்டணி தமாகா அணி வேட்பாளர்கள் வெற்றி பெற 234 தொகுதிகளிலும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண் டும். கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஒற்றுமையாக தேர் தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். தேமுதிக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிற பட்சத்தில், அரசின் பிரதான துறைகள் நமது கட்சிக்குத்தான் கிடைக்கும். நீங்கள்தான் அந்தப் பொறுப்புகளுக்கு வருவீர்கள். எனவே, இதனை மனதில் வைத்து உற்சாகத்துடன் தேர்தல் பணியாற்றுங்கள்.
தொகுதிகள் வாரியாக குழுக் கள் அமைத்து பிரச்சாரம் மேற் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்குகளை சேரிக்க வேண்டும்” என்று கூறியதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.