

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வில்சன் பால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகி றது. தேர்தல் நேரத்தில் அதுதொடர் பான செய்திகளை வெளியிட்டால், அது மக்கள் மத்தியில் அதிமுக மீது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.
‘பிரசுரிப்பதில் தவறு இல்லை’
தேர்தல் கருத்துக் கணிப்பு களுக்கு தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதுபோல, சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை குறித்த செய்தி களையும் வெளியிடக் கூடாது என ஒரு நாளிதழ் நிர்வாகத்திடமும், பிரஸ் கவுன்சிலிலும் முறையிட் டேன். ‘இதுதொடர்பான செய்தியை எல்லோரும் பிரசுரிப்பார்கள். அதனால், நாங்கள் பிரசுரிப்பதில் தவறு இல்லை’ என்றனர். எனவே, சொத்துக் குவிப்பு வழக்கு தொடர் பான செய்தியை வெளியிடக் கூடாது என அந்த நாளிதழ் நிர்வாகத்துக்கும், பிரஸ் கவுன்சிலுக்கும் உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டி ருந்தது.
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘பாதிக்கப்படும் நபர்கள் யாரும் வழக்கு தொடரவில்லை. மனுதாரர் சுயவிளம்பரத்துக்காகவே தாக்கல் செய்துள்ளார். அவர் வழக்கறிஞராக இருந்தாலும், பொதுநல வழக்கை தாக்கல் செய்ய சில கட்டுப்பாடு கள் உள்ளன. அதை முறையாக பின்பற்ற வேண்டும்’’ என்று தெரி வித்தனர். இதையடுத்து, வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தெரிவித்ததால், வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.