"எதிர்கட்சிகளுக்கு வாக்களித்தால், அது செல்லாத வாக்குகளாகிவிடும்" - தமிழச்சி தங்கபாண்டியன்

"எதிர்கட்சிகளுக்கு வாக்களித்தால், அது செல்லாத வாக்குகளாகிவிடும்" - தமிழச்சி தங்கபாண்டியன்
Updated on
1 min read

சென்னை: "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்கட்சிகள், சுயேச்சைகளுக்கு வாக்களித்தால், அது செல்லாத வாக்குகளாகிவிடும்" என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும், தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 122-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஷீபா வாசுவை ஆதரித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " எதிர்கட்சிகள், சுயேச்சைகள்... இவர்களுக்கு எல்லாம் வாக்கை சிதறடித்தால், அது பிரதமர் மோடி அறிவித்தார் இல்லையா, செல்லாத பணம், அதுபோல செல்லாத வாக்குகளாகிவிடும்.

நான்கு நாட்களுக்கு முன்பாக, தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக நாங்கள் அளித்த, வீடுதோறும் ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும் என்ற அறிவிப்பை உறுதி செய்து மீண்டும் வெளியிட்டுள்ளார். நிச்சயமாக தருவோம். அதற்கான கணக்கெடுப்பு பணிகள் தொடங்கிவிட்டன. ஆகவே அதனை நிறைவேற்றுவோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in