

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மூலம் தமிழகத்தில் உள்ள அவர் களின் உறவினர்களை திமுகவுக்கு வாக்களிக்க வைக்க அக்கட்சி நூதன தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக் கானோர், வெளிநாடுகளில் வசிக்கின்ற னர். சிலர் வெளிநாடுகளிலேயே குடியுரிமை பெற்று வெளிநாடு வாழ் இந்தியர்களாக வசிக்கின்றனர்.
கடந்த வாரம் பக்ரைனில், திராவிட முன்னேற்றக் கழக கலைஞர் செம் மொழிப் பேரவை சார்பில், பல்சுவை நிகழ்ச்சியும் ‘தமிழகத்தை மீட்போம், திராவிட இயக்கத்தை காப்போம்’ என்ற பிரச்சாரக் கூட்டமும் நடைபெற்றது. இதில் செம்மொழிப் பேரவை அமைப்பின் தலைவர் குளச்சல் சாதிக், துணைச் செயலாளர் வேம்புராஜ், ஆலோசகர் அப்துல்கபூர், நாஞ்சில் பஷீர், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பிரான்சிஸ், ஆண் டனி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் யூசப் ராஜகிரி, முஸ்லிம் லீக் சார்பில் பக்ருதீன் மற்றும் திமுக அனுதாபிகள் மட்டுமில்லாது அந்த கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சி களின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக பக்ரைன் பாரதி தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர் அப்துல் கையூம் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக இந்தக் குழுவினர் பக்ரைனில் உள்ள லேபர் கேம்ப்களுக்கு சென்று அங்குள்ள தமிழர்களிடம் திமுகவின் சாதனைகளை விளக்கி, தமிழகத்தில் அவர்களின் உறவினர்களை தொடர்புகொண்டு திமுகவுக்கு வாக்களிக்க செய்ய வேண்டும் என பிரச்சாரம் செய்து வருகின்றனர்.