Published : 16 Feb 2022 10:02 AM
Last Updated : 16 Feb 2022 10:02 AM

முன்னாள் அமைச்சரிடம் தொடர் விசாரணை

விருதுநகர்: ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாககூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஜன.5-ல் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் தந்தது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த சனிக்கிழமை அனுப்பிய சம்மனை ஏற்று அவர் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

அதைத் தொடர்ந்து, 2-வது முறையாக அவர் நேரில் ஆஜராக நேற்று முன்தினம் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை 11 மணியளவில் ஆஜரான கே.டி. ராஜேந்திரபாலாஜியிடம் ஆவணங்கள், ஆதாரங்கள் குறித்து போலீஸார் சுமார் 8 மணி நேரம் விசாரித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x