Published : 16 Feb 2022 07:38 AM
Last Updated : 16 Feb 2022 07:38 AM
அரசியலமைப்பு சட்டத்தை அதிமுகஇணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி படிக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து கோவை மாவட்டத்தின் பல்வேறுஇடங்களில் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று பிரச்சாரம் செய்தார். இருகூரில் அவர் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் ஐந்தாண்டு காலமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. சட்டப்பேரவை, மக்களவைக்கு எப்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறதோ, அதேபோல உள்ளாட்சிகளுக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்திஉள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதைப்பற்றி பேசுவதற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தயாராக இல்லை. ஆனால், மத்தியஅரசு முன்மொழிகிற ‘ஒரே நாடு ஒரேதேர்தல்’ கோஷத்தை ஆதரித்து பேசுகிறார்.
பழனிசாமி முதலில் அரசியல மைப்பு சட்டத்தை படிக்க வேண்டுகிறேன். கடந்த பத்தாண்டு காலமாகஅதிமுக ஆட்சியில் இருந்த போது உங்களால் மக்கள் பிரச்சினை களை தீர்க்க முடிந்ததா? மத்தியில்உள்ள பாஜக அரசு மக்களை பிளவுபடுத்தியது. ஜிஎஸ்டி வரிகளை போட்டு தொழில்களை நிலைகுலைய வைத்தது. பல்லாயிரக் கணக்கான சிறு, குறு தொழில்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. மக்கள் தூங்கிவிட்டு கண்விழித் தால் உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிதான் முன்னால் நிற்க வேண்டும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தஉள்ளாட்சிக்கு தேர்தல் நடத்தாமல் அதிகாரிகளின் துணையோடு ஊழல் மலிந்த நிர்வாகமாக மாற்றியது கடந்த அதிமுக அரசு. இவர்களிடம் இருந்து உள்ளாட்சிகளை பாதுகாக்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு பெருவாரி யான வாக்குகளை அளித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்,து சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதி களில் ஜி.ராமகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT