Published : 12 Apr 2016 02:34 PM
Last Updated : 12 Apr 2016 02:34 PM

காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் பீட்டர் அல்போன்ஸ்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நாளை காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பொதுச் செயலாளர் பெ.விஸ்வநாதன் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் வி.ராஜேஸ்வரன் ஆகியோருடன் நூற்றுக்கணக்காணவர்கள் நாளை (13.4.2016) அன்று காலை 10.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் காங்கிரஸில் இணைகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிருப்தி.. விலகல்.. பின்னணி...

அதிமுகவுடனான கூட்டணி முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர்.

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்காமல் குடும்பத்தினரின் பேச்சைக் கேட்டு வாசன் தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளார். விஜயகாந்தை முதல்வராக ஏற்க முடியாது என அவர்கள் குற்றம்சாட்டினர்.

தமாகாவில் இருந்து விலக முடிவு செய்துள்ள அவர்கள் நேற்று (திங்கள்கிழமை) சென்னை அண்ணா நகரில் உள்ள பீட்டர் அல்போன்ஸ் வீட்டில் பல மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், அவர்கள் நாளை காங்கிரஸில் இணைகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x