Published : 16 Feb 2022 11:59 AM
Last Updated : 16 Feb 2022 11:59 AM
சிவகங்கை மாவட்டம், கானாடுகாத் தான் பேரூராட்சியில் ஒரே வார்டில் காங்கிரஸ், திமுக போட்டியிடும் நிலையில், நேற்று பிரச்சாரம் செய்த முன்னாள் மத்திய அமைச் சர் ப.சிதம்பரத்திடம் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென வாக்காளர்கள் கேள்வி கேட்ட தால், அவர் குழப்பம் அடைந்தார்.
கானாடுகாத்தான் பேரூராட்சி யில் மொத்தமுள்ள 12 வார்டுகளில் திமுக 9 , காங்கிரஸ் 2, விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு ஒரு வார்டு ஒதுக்கப்பட்டது. விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் தேர்தல் நடக்கவில்லை. மேலும் 4-வது வார்டில் காங்கிரஸ் சார்பில் தனபாக்கியம் போட்டியிடுகிறார். அதே வார்டில், திமுக சார்பில் அன்புக்கரசி போட்டியிடுகிறார்.
இரு வேட்பாளர்களுக்கும் இரு கட்சிகளின் தலைமையும் சின்னம் வழங்க கடிதம் வழங்கியது. இதனால் திமுக, காங்கிரஸ் வேட் பாளர்கள் இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கானாடுகாத்தான் பேரூராட்சியில் காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது அங்கிருந்த வாக்காளர் ஒருவர் 4-வது வார்டில் காங்கிரஸ், திமுக போட்டியிடுகிறது. அங்கு யாருக்கு வாக்களிப்பது எனக் கேள்வி எழுப்பினார். இதனால் குழப்பம் அடைந்த சிதம்பரம் கூட்டணியில் 2 கட்சிகளும் ஒரே வார்டில் நிற்க முடியாதே என காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்டார்.
அப்போது திமுக சார்பில் நிற்பவருக்கு தவறுதலாக சின்னம் ஒதுக்கிவிட்டதாகவும், அவருக்கு திமுகவினர் யாரும் வாக்கு கேட்கக் கூடாது என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்து விட்டதாகவும் காங்கிரஸார் தெரிவித்தனர். இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்தார். மாங்குடி எம்எல்ஏ உடன் இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT