கொடைக்கானலில் கோடை சீஸன் தொடக்கம்: சாரல் மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் கோடை சீஸன் தொடக்கம்: சாரல் மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
Updated on
1 min read

கோடைமழை தொடங்கியதை அடுத்து கொடைக்கானலில் கோடை சீஸன் தொடங்கிவிட்டது. இதமான தட்பவெப்பநிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை இனி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படு கிறது. சீஸன் காலம் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின் றனர். கோடை காலத்தில் வெயி லின் தாக்கம் அதிகம் காரணமாக பலரும் மலைப் பிரதேசமான கொடைக்கானலை நாடி மாநிலம் முழுவதுமிருந்தும், பிற மாநிலங் களில் இருந்தும் வருகின்றனர்.

கடந்த மாத தொடக்கத்தில் கொடைக்கானலில் பகலில் சுட் டெரிக்கும் வெயில் காணப்பட்டது. இரவு நேரங்களில் மட்டும் குளிர்ந்த காற்று வீசியது. கடந்த மாத இறுதியில் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான அடுக்கம் பகுதியில் பரவலாக கோடை மழை பெய்தது. இதையடுத்து ஏப்ரல் முதல் வாரத்தில் கொடைக் கானலில் கோடை சீஸன் தொடங் கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சில தினங்க ளுக்கு முன்பு கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதையடுத்து மலைப் பகுதியில் நிலவிவந்த வெயிலின் தாக்கம் குறைந்தது. நேற்று பகலில் ஒரு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. மலைப் பகுதி முழுவதும் கோடை மழை பரவலாக பெய்தததால் குளிர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை தற்போது நிலவுகிறது. இதையடுத்து கோடை சீஸன் தொடங்கியுள்ளது.

பிளஸ் 2 தேர்வு கடந்த வாரம் முடிவுற்ற நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நாளை முடிய உள்ளன. இதனால் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் சுற்றுலாப் பயணி கள் வருகை அதிகரிக்கும் வாய்ப் புள்ளது. இதனால் கொடைக்கான லில் சுற்றுலாப் பயணிகளை நம்பி கடை வைத்துள்ள சிறுவியாபாரி கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மலர் கண்காட்சியை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள பூச்செடிகள் மழையால் துளிர்க்கத் தொடங்கி யுள்ளன. நேற்று கொடைக்கான லில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. காலையில் வெயில் காணப்பட்டாலும் பகல் 12 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. ஒரு மணி நேர மழைக்குப் பிறகு மாலையில் மேகக் கூட்டங்கள் தழுவிச் சென்றதை சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர். மலைப்பகுதி விவசாயத்துக்கும் இந்த மழை ஏற்றதாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in