

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த சிறுதாவூரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பங்களாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்டெய்னர் லாரிகள் நின்றிருந் ததாக, தேர்தல் ஆணையரிடம் திமுக வினர் புகார் தெரிவித்தனர்.
சிறுதாவூர் பங்களாவுக்கு கன்டெய்னர் லாரிகளில் பணம் கொண்டு செல்லப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், அதிமுக பொதுச் செய லாளர் மீது அவதூறாக பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாக வைகோ மீதும், பொய்யான தகவல்களை பரப்பியதாக சன் டிவி மீதும், அதிமுகவின் காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருப்போரூர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், வைகோ மீது 2 பிரிவுகளின் கீழும், சன் டிவி மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சட்டப்படி சந்திப்பேன்
‘அதிமுகவினர் தொடுத்துள்ள அவதூறு வழக்கை நான் சட்டப்படி சந்திப்பேன். இந்த வழக்குத் தொடர்பாக நான் பிணை கேட்கமாட்டேன்’ என்று வைகோ பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.